Shadow

Tag: இன்ஸ்பயரிங் இளங்கோ

மாற்றுத் திறனாளிகள் தினம் – ‘இன்ஸ்பயரிங்’ மாயோன்

மாற்றுத் திறனாளிகள் தினம் – ‘இன்ஸ்பயரிங்’ மாயோன்

சினிமா, திரைத் துளி
இன்று சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்படுவதால், சிபிராஜ் நடிப்பில் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'மாயோன்' படத்தின் டீஸர், மாற்று திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது, அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. இது தொடர்பாக படத்தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தன்னுடைய டுவிட்டர் பதிவில், ''மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தின வாழ்த்துக்கள்! நாங்கள் எப்போதும் நினைவாற்றலையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக 'மாயோன்' படத்தின் டீசரை பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத் திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்தியேக ஒலிக் குறிப்புடன் உருவாக்கி வெளியிட்டிருக்கிறோம். நாம் அனைவரும் நம்முள் பல 'இயலாமை'களையும், 'அச்சங்'களையும் கொண...