Shadow

Tag: இயக்குநர் நம்பிக்கை சந்துரு

3:33 – நேரம்தான் அமானுஷ்ய வில்லன்

3:33 – நேரம்தான் அமானுஷ்ய வில்லன்

சினிமா, திரைத் துளி
பேம்பூ ட்ரீஸ் ப்ரொடக்ஷன்ஸ் (Bamboo Trees Productions) சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிரபல நடன இயக்குநர் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குநர் நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ள படம் '3:33'. முழுக்க முழுக்க இதயத்தைத் தாக்கும் ஹாரர் அனுபவமாக, உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் 10 முதல் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக காலம் (நேரம்) கதையின் வில்லனாக இருக்கும் கதையில், நேரத்தை மையமாகக் கொண்ட ஹாரர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதுவரையிலான சினிமா வரலாற்றில் இறந்து போன ஆத்மாக்கள், கொலையுண்ட ஆவிகள் தான் பேயாக வந்து பயமுறுத்தும். இப்படத்தில் நாயகனை 3.33 என்னும் குறிப்பிட்ட டைம் பயமுறுத்துகிறது. அந்தக் குறிப்பிட்ட நேரம் நாயகனைப் பாடாய்படுத்தி சிக்கலுக்கு உள்ளாக்குவதும், அந்த நேரத்தில் மாட்டிக் கொள்ளாமல் நாயகன் எப்படித் தப்பிக்கிறான் என்பது தான் கதை. படத்தின் ...