32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

எஸ்.ஜே.சூர்யா

30 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
“சர்தார் 2: உங்கள் ஆரோக்கியத்தை அசைத்துப் பார்க்கும் விஷயத்தைப் பேசியுள்ளோம்” – கார்த்தி சினிமா முக்கியச் செய்தி
02/09/2026 Dinesh R 3 நிமிட வாசிப்பு

“சர்தார் 2: உங்கள் ஆரோக்கியத்தை அசைத்துப் பார்க்கும் விஷயத்தைப் பேசியுள்ளோம்” – கார்த்தி

பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐவிஒய் (IVY) என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.லக்ஷ்மன் குமார், இஷான் சக்சேனா ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார். சென்னை வர்த்தக மையத்தில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
“ஆறு வருடம் கழித்து..” – யோகி பாபு ! ரவி மோகன் ஸ்டுடியோ சினிமா

“ஆறு வருடம் கழித்து..” – யோகி பாபு ! ரவி மோகன் ஸ்டுடியோ

நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தைப் பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். இயக்குநர் ராஜா மோகன், “ரவியுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு 17 வயது இருக்கும் போது அவனுக்கு 11 வயது. அப்போது பரதநாட்டியம் 5 மணி நேரம் தொடர்ச்சியாக அரங்கேற்றம் செய்தான். அப்போது, அவ்வளவு வருடமாக மிரட்டி உருட்டிக் கொண்டிருந்த அவனை அண்ணாந்து பார்த்தேன். அதேபோல் இன்றும் அண்ணாந்து பார்க்கிறேன். புதுப்பேட்டை படத்தில் […]

01/09/2025 Dinesh R
வீர தீர சூரன் – பாகம் 2 | Veera Dheera Sooran review இது புதிது

வீர தீர சூரன் – பாகம் 2 | Veera Dheera Sooran review

காவல்துறை உயரதிகாரியான எஸ்.பி. அருணகிரி, கண்ணனையும் அவரது தந்தையான பெரியவர் ரவியையும் என்கவுன்ட்டரில் கொல்ல நினைக்கிறார். இதையறியும் பெரியவர் ரவி, தன் மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென நினைக்கிறார். அதற்காக எஸ்.பி.யைக் கொல்ல, மளிகைக் கடை வைத்திருக்கும் காளியை அணுகுகிறார். யார் யாரைக் கொன்றார்கள் என்பதே படத்தின் கதை. படத்தின் முதல் ஃப்ரேமிலேயே கதைக்குள் சென்றுவிடுகிறார் இயக்குநர் S.U.அருண் குமார். தன் கணவன் ஃபோன் எடுக்காததால் பதற்றமடையும் ஒரு மனைவியின் கோபம், ஒரு நாள் இரவுக்குள் என்னென்ன […]

28/03/2025 Dinesh R
சூர்யா’ஸ் சாட்டர்டே – இரண்டு கோபங்கள் சந்திக்கும் புள்ளி அயல் சினிமா

சூர்யா’ஸ் சாட்டர்டே – இரண்டு கோபங்கள் சந்திக்கும் புள்ளி

டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் “சூர்யா’ஸ் சாட்டர்டே” எனும் திரைப்படம் இம்மாதம் 29 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘நேச்சுரல் […]

18/08/2024 Dinesh R
ராயன் விமர்சனம் இது புதிது

ராயன் விமர்சனம்

D50 எனும் தனது ஐம்பதாவது படத்தை தனுஷே இயக்கியுள்ளார். இது இயக்குநராக அவருக்கு இரண்டாம் படம் என்பது குறிப்பிடத்தக்கது. காத்தவராயன், முத்துவேல்ராயன், மாணிக்கவேல்ராயன் என ராயன் சகோதரர்கள் மூவர். அவர்களுக்கு துர்கா எனும் தங்கை பிறக்கிறாள். அவள் கைக்குழந்தையாக இருக்கும்போதே, அவளைத் தூக்கிக் கொண்டு ராயன் சகோதரர்கள் சென்னை வந்துவிடுகின்றனர். வளர்ந்ததும், குடிகாரரான முத்துவேல்ராயனால் ஒரு பெரும்பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. அதை ஒன்றாகச் சேர்ந்து எதிர்கொள்ளும் ராயன் சகோதரர்கள், ஒரு கட்டத்தில், கதையில் எதிர்பாராத திருப்பமும், […]

26/07/2024 Dinesh R
நானி பிறந்தநாளில் வெளியான ”சூர்யா’ஸ் சாட்டர்டே” க்ளிம்ப்ஸ் இது புதிது

நானி பிறந்தநாளில் வெளியான ”சூர்யா’ஸ் சாட்டர்டே” க்ளிம்ப்ஸ்

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் உருவான ‘சூர்யா’ஸ் சாட்டர் டே’ எனும் பான் இந்திய திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயாவுடன் இரண்டாவது முறையாக இணைந்து உருவாக்கி இருக்கும் பான் இந்திய திரைப்படம் ‘சூர்யா’ஸ் சாட்டர் டே’. ‘அன்டே சுந்தரானிகி’ படத்தில் நானி […]

04/03/2024 Inbaaraja
தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு சீயான் 62ல் இணைகிறார் சினிமா

தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு சீயான் 62ல் இணைகிறார்

மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறை வென்றவரும், 2016ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவருமான நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, ‘சீயான் 62’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘சீயான்’ விக்ரம் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில், இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் ‘சீயான் 62’ எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு லேட்டஸ்ட்டாக […]

04/03/2024 Inbaaraja
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கராஜன், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “எல்.ஐ.சி” படம் துவங்கியது சினிமா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கராஜன், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “எல்.ஐ.சி” படம் துவங்கியது

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் பெருமையுடன் வழங்கும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி ( LIC )” பூஜையுடன் நேற்று துவங்கியது !! விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படம் பூஜையுடன் நேற்று துவங்கியது !! புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், ராக்ஸ்டார் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, […]

15/12/2023 Inbaaraja
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம் சினிமா

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்

கத்தியால் ஒருவர் கண்ணில் வரவழைக்கும் கண்ணீரை விட, கலையால் ஒருவர் கண்ணில் வரவழைக்கப்படும் கண்ணீர் துளி சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்துவதற்கான உயிர்த்துளி என்பதை ஒருவித கோணத்தில் கூறிய திரைப்படம் ஜிகர்தண்டா. அதே கருத்தை மற்றொரு மாற்றுக் கோணத்தில் இன்னும் அழுத்தமாக, தீவிரமாகப் பேசியிருக்கும் திரைப்படம் தான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. ”கலையை நீ தேர்ந்தெடுக்கவில்லை; கலை தான் உன்னைத் தேர்ந்தெடுக்கிறது” என்கின்ற கனமான கவித்துவமான வரிகளுடன் துவங்குகிறது திரைப்படம். அந்த வரிகளுக்கான நியாயத்தை ஒவ்வொரு காட்சியிலும் […]

10/11/2023 Dinesh R
மார்க் ஆண்டனி விமர்சனம் சினிமா

மார்க் ஆண்டனி விமர்சனம்

காலத்தில் முன்னோக்கியோ பின்னோக்கிய நாம் பயணம் செய்து நம் வாழ்க்கையில் நடந்த அல்லது நடக்கவிருக்கிற நிகழ்வுகளை மாற்றுவதன் மூலமாக நம் வாழ்க்கையையே மாற்ற முடியும் என்பது தான் இதுவரை வந்திருக்கும் எல்லா “டைம் டிராவல்” திரைப்படங்களின் கதையும்.  டைம் டிராவல் என்று சொல்லப்படும் இந்த கருத்தானது அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு மாயமான கற்பனை. ஆரம்பகாலங்களில் வெளியான ‘டைம் டிராவல்’ திரைப்படங்களில்  முன்னோக்கிய அல்லது பின்னோக்கிய கால பயணத்தில் செல்லும் கதாபாத்திரம் தன் எதிர்காலத்திலோ அல்லது இறந்த காலத்திலோ […]

19/09/2023 Inbaaraja
பொம்மை விமர்சனம் இது புதிது

பொம்மை விமர்சனம்

Mannequin (1987) என்ற ஆங்கிலப்படத்தின் அதிகாரபூர்வமற்ற தழுவலே ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான பொம்மை. ஒரு நிறுவனத்தில் பொம்மை செய்யும் கலைஞராக வேலை செய்கிறார் எஸ்.ஜே. சூர்யா. அவர் வடித்தெடுக்கும் பொம்மையில் தன் காதலி பிரியா பவானி சங்கரைப் பார்க்கிறார். அந்தப் பொம்மை உயிர் பெற்று வந்து எஸ்.ஜே. சூர்யாவிடம் பேசுகிறது. தன்னை வீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்கிறது. ஒரு கட்டத்தில் அந்தப் பொம்மைக்காகக் கொலையும் செய்கிறார். அந்தக் கொலைக்கான விசாரணை ஒருபுறம் நடக்க, […]

17/06/2023 Dinesh R
வாரிசு விமர்சனம் இது புதிது

வாரிசு விமர்சனம்

தொழிலதிபர் ராஜேந்திரன் பழனிச்சாமிக்கு, ஜெய், அஜய், விஜய் என மூன்று மகன்கள். தனது தொழில் வாரிசாக அவர் எந்த மகனை நியமிக்கப் போகிறார் என முடிவெடுக்கக் கதையில் எழு வருடமும், படத்தில் ஒரு மணி நேரம் பத்து நிமிடங்களும் எடுத்துக் கொள்கிறார் ராஜேந்திரன். ராஜேந்திரனின் மகுடம் அவரது இளைய மகன் விஜய் ராஜேந்திரனிடம் போகிறது. பிளவுப்படும் குடும்பத்தையும், ராஜேந்திரன் எழுப்பிய தொழில் சாம்ராஜ்ஜியத்தையும், விஜய் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. ஒரு நாயகன் மாஸாகவோ, பாஸாகவோ […]

11/01/2023 Dinesh R
வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி விமர்சனம் OTT

வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி விமர்சனம்

சுழல் தொடரின் வெற்றிக்குப் பிறகு, தங்கள் நிறுவனமான வால்வாட்ச்சர் ஃப்லிம்ஸ் சார்பாக புஷ்கர் – காயத்ரி தயாரித்திருக்கும் தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. வெலோனி எனும் இளம்பெண் கொல்லப்பட, கொலையாளியைத் தேடுகிறது காவல்துறை. வெலோனி பற்றி எந்தத் தெளிவான உண்மையும் கிடைக்காமல், அவளைப் பற்றி மர்மங்களும் வதந்திகளும் மட்டுமே நிலவுவதால், காவல்துறை அவ்வழக்கை மூடி விடுகிறது. ஆனாலும் உண்மைக் குற்றவாளியை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டுமென அல்லாடுகிறார் துணை ஆய்வாளர் விவேக். வெலோனியைக் கொன்றது […]

02/12/2022 Dinesh R
‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல் Event Photos

‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்

ப்ரைம் வீடியோவும், வால்வாட்சர் ஃப்லிம்ஸும் இணைந்து, ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ சீரிஸின் சிறப்புத் திரையிடலைத் திரைப்பிரபலங்களுக்காக ஒருங்கிணைத்தது. தொடர் ப்ரைம் வீடியோவில் வெளியாக இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் இந்த சிறப்புத் திரையிடல் சென்னையில் அரங்கேறியது. தொடரில் நடித்த நடிகர்களும் படைப்பாளிகளும், திரையிடலுக்கு வந்தவர்களை வாஞ்சையுடன் வரவேற்றனர். ‘வதந்தி’ வெப் சீரிஸின் தயாரிப்பாளர்கள் புஷ்கர், காயத்ரி, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா, விவேக் பிரசன்னா, குமரன் தங்கராஜன் மற்றும் ஸ்ம்ருதி […]

01/12/2022 Dinesh R