Shadow

“ஆறு வருடம் கழித்து..” – யோகி பாபு ! ரவி மோகன் ஸ்டுடியோ

நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தைப் பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார்.

இயக்குநர் ராஜா மோகன், “ரவியுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு 17 வயது இருக்கும் போது அவனுக்கு 11 வயது. அப்போது பரதநாட்டியம் 5 மணி நேரம் தொடர்ச்சியாக அரங்கேற்றம் செய்தான். அப்போது, அவ்வளவு வருடமாக மிரட்டி உருட்டிக் கொண்டிருந்த அவனை அண்ணாந்து பார்த்தேன். அதேபோல் இன்றும் அண்ணாந்து பார்க்கிறேன்.

புதுப்பேட்டை படத்தில் ஒரு வசனம் வரும். அது போல, ‘இவ்வளவு திறமைகளையும் வைத்துக் கொண்டு தான் என்னிடம் இத்தனை வருடம் நடித்துக் கொண்டிருந்தாயா?’ என்று தான் கேட்கத் தோன்றுகிறது. முதல் படத்தில் இருந்து இப்போது வரை நான் சொன்னதை கேட்டு இயக்குநரின் நடிகராக இருந்திருக்கிறான். இப்போது இயக்குநராக நிச்சயம் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது. இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் ரவி நன்றாக இருக்க வேண்டும் என்று தான் மனதார நினைக்கிறார்கள். இவ்வளவு பேரை அவன் சம்பாதித்து வைத்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

பாடகி கெனிஷா, “நான் ஒரு பாடகி, இசைத் தயாரிப்பாளர், ஆன்மிக சிகிச்சையாளர். தற்போது “ரவி மோகன் ஸ்டுடியோஸ்”-இன் பங்குதாரர். இந்த வாய்ப்பை வழங்கிய திரு.ரவி மோகன் அவர்களுக்கு நன்றி. கடவுளுக்கும் பிரபஞ்சத்துக்கும் நன்றி. அம்மா, அப்பா மற்றும் ராஜா அண்ணா அவர்களுக்கு நன்றி. நான் நீண்ட காலமாகத் தனிமையில் இருந்தேன். இப்போது ரவி அவர்களின் மூலம் இப்படி அழகான மனிதர்கள் கிடைத்துள்ளார்கள்.

நான் மிகவும் கடினமான சூழலில் இருந்து வந்த ஒருவர், ரவி அவர்கள் மிகவும் சிறப்பான ஒரு சூழலில் இருந்து வந்தவர். நாங்கள் இருவரும் இணைந்து, ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தைப் பெரிய அளவில் பிரபலமாக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். எங்களின் கனவும் அது தான். எங்களுடைய குழு இல்லாமல் இன்றைய நாள் சாத்தியம் ஆகிருக்காது.

ரவி அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், அவர் வாழ்கையில் மிகவும் கடினமான சூழ்நிலையைக் கடந்து வந்து இருக்கிறார். அவருக்கு என்ன சோகம் இருந்தாலும், வலி இருந்தாலும் வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் மற்றவரிடம் பழகுவார். அது சரி தான். ஆனால், நீங்கள் யார் உங்களிடம் வந்தாலும், அவர் இருளில் இருந்தாலும் நீங்கள் அவர் வாழ்கையை வெளிச்சமாக மாற்றி விடுகிறீர்கள். இப்போது என்னிடம் 7 முழு ஸ்கிரிப்ட் உள்ளது. அவ்வளவு திறமையான நீங்கள், உங்களின் அனைத்துத் திறமைகளையும் இந்த உலகம் பார்க வேண்டும். எனக்கு மிகப் பெரும் பேராசை உள்ளது. என்னவென்றால், இந்த உலகத்திலுள்ள அத்தனை மனிதரும் உங்களுள் இருக்கும் கடவுளைப் பார்க்க வேண்டும். அந்தக் கடவுளை நான் பார்த்து விட்டேன். வெற்றிக்கான நாட்கள் குறைவாக தான் உள்ளது. அதற்காக நீங்கள் அதிக உழைப்பைக் கொடுத்துள்ளீர்கள்.

நீங்கள் ஒருநாள் வரலக்ஷ்மி அம்மாவுடன் இருந்தால் தெரியும், ரவி மோகன் அவர்கள் என் இவ்வளவு சிறந்த மனிதராக இருக்கிறார் என்று. இப்படி பட்ட ஒருவரைக் கொடுத்ததற்கு நன்றி அம்மா. இங்கு வருகை தந்திருக்கும் அனைவர்க்கும் நன்றி” என்றார்.

நடிகர் யோகி பாபு, “கோமாளி படத்தில் பணியாற்றும்போது, ரவி, ‘ நான் படம் இயக்கினால் நீங்கள் தான் ஹீரோ’ என்று கூறினார். ஆறு வருடம் கழித்தும் அதை மறக்காமல் இன்று நிறைவேற்றி இருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, “முதலில், ரவி மோகன் சார் கதை கேட்கச் சொன்னார். கார்த்திக் சார் வந்து கதை சொன்னார். கதை கேட்டதுமே பிடித்து விட்டது. இப்போது வரும் படங்களில் குடும்பத்துடன் சந்தோஷமாகப் பார்க்கக்கூடிய காதலோடு நகைச்சுவையோடு உணர்வு பூர்வமான பயணத்தை இன்றைய சினிமா இழந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட அம்சத்தில் இந்தப் படம் வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. ‘ப்ரோ கோட்’ என்கிற விஷயம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும். ரவி மோகன் சார் ஸ்டுடியோஸ் முழுக்க முழுக்கப் பொழுதுபோக்கான திரைப்படமாக உருவாகி இருக்கிறது. அதிலும் முதல் படமாக இது வருவது நல்ல விஷயம். கதை கேட்டதும் பிடித்திருந்தால் உள்ளே குதித்து விடுவேன். கதைப் பிடித்து இருக்கிறது என்று ரவிசாரிடம் கூறினேன். அதன் பிறகு ஒவ்வொரு வேலையாக ஆரம்பித்து இன்று பூஜை வரை வந்திருக்கிறது. பெரிய நடிப்பு பட்டாளங்கள் இப்படத்தில் இருக்கிறார்கள்” என்றார்.