32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

ஜெயம் ரவி

17 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
சட்டி கறி – ஈரோடு ஸ்பெஷல் நாட்டுக்கோழி உணவகம் | ECR அக்கரை இது புதிது முக்கியச் செய்தி
23/02/2025 Dinesh R 2 நிமிட வாசிப்பு

சட்டி கறி – ஈரோடு ஸ்பெஷல் நாட்டுக்கோழி உணவகம் | ECR அக்கரை

ஈரோடு பகுதியில் பிரபலமான ஸ்பெஷல் நாட்டுக்கோழி உணவு வகைகள் இனி சென்னையிலும் கிடைக்கும். அதற்காக, சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள அக்கரை எனும் இடத்தில் ‘சட்டி கறி’ உணவகம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் மற்றும் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த உணவகத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து உரிமையாளரும் உணவு ஆர்வலருமான அஷ்வினும் காயத்ரியும், ”உணவே மருந்து! ஆரோக்கியத்தின் ஆணிவேர் உணவு! எங்களுடைய […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
ஜீ5 இல் ஸ்ட்ரீமாகிறது ‘பிரதர்’ திரைப்படம் OTT

ஜீ5 இல் ஸ்ட்ரீமாகிறது ‘பிரதர்’ திரைப்படம்

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான் ‘பிரதர்’ திரைப்படம் ஜீ5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. கமர்ஷியல் காமெடிப் படங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ள ‘பிரதர்’ திரைப்படத்தில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நடராஜன், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து, குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான இப்படம், தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களை […]

28/11/2024 Dinesh R
ஜீனி | வித்தியாசமான வேடத்தில் ஜெயம் ரவி Movie Posters

ஜீனி | வித்தியாசமான வேடத்தில் ஜெயம் ரவி

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே.கணேஷ், ‘ஜீனி’ படத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு வியக்க வைக்கும் சினிமா அனுபவத்தைக் கொடுக்கவுள்ளார். ஜெயம் ரவி நடித்துள்ள இந்தப் படத்தின் வித்தியாசமான முதல் பார்வையே இதற்குச் சான்று. இயக்குநர் மிஷ்கினின் ’பிசாசு’ மற்றும் ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராகப் பணீயாற்றிய அர்ஜூனன் Jr. இதில் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தைப் பற்றி, “ஜெயம் ரவியுடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய அர்ப்பணிப்பும் […]

26/03/2024 Dinesh R
சைரன் விமர்சனம் இது புதிது

சைரன் விமர்சனம்

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நாயகன் 16 வருட காலமாக பரோலில் செல்ல மறுத்து வருகிறான். ஒரு கட்டத்தில் பரோலில் செல்ல சம்மதிக்கிறான். அவன் பரோலில் வெளிவந்த தருணத்தில் அவன் வழக்கோடு தொடர்புடைய நபர்கள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். போலீஸின் சந்தேகம் நாயகன் பக்கம் திரும்ப துவங்க நாயகன் அப்பழியை மறுக்கிறான். இறந்தவர்கள் எப்படி இறந்து போனார்கள் நாயகனின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை விவரிப்பதே இந்த சைரன் திரைப்படத்தின் கதை.. துவங்கும் போது லாக்கப் […]

17/02/2024 Inbaaraja
பொன்னியின் செல்வன் 2 விமர்சனம் இது புதிது

பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்

பொன்னியின் செல்வன் நாவலே எழுத்தாளர் கல்கியின் புனைவு எனும் பட்சத்தில், இப்படத்தில் வரலாற்று ஆராய்ச்சி செய்வதென்பது பாலைவனத்தின் மத்தியில் கடல்மீன்களைத் தேடும் அநாவசிய முயற்சியாகும். ஆக, புனைவை ஆராயாமல் ரசிக்க முடிந்தால், பொன்னியின் செல்வன் 2, அதன் முதல் பாகத்தை விடவுமே சிறப்பாக உள்ளதை உணரலாம். போரில்லாமல் வரலாற்றுப் புனைவை முடிக்கக் கூடாதென்ற வணிக நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு, ஒரு போர்க்காட்சியை அமைத்துள்ளனர். அந்தப் போர்க்களக் காட்சி இல்லாமலேயே படம் முழுமையடைந்திருக்கும். காதலியை இழந்த வேதனையும், தீனமான நிலையில் […]

28/04/2023 Dinesh R
சகாப்தம் படைத்த பொன்னியின் செல்வன் சினிமா

சகாப்தம் படைத்த பொன்னியின் செல்வன்

‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று’ வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் லைகா குழும தலைவர் சுபாஷ்கரன், திருமதி பிரேமா சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் சீயான் விக்ரம், இரா. பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, லைகா நிறுவனத்தின் தமிழகத் தலைமை நிர்வாக அதிகாரி ஜிகேஎம் தமிழ்குமரன் உள்ளிட்ட பலர் […]

06/11/2022 Dinesh R
கோமாளி விமர்சனம் சினிமா

கோமாளி விமர்சனம்

ட்ரெய்லர் வந்த ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த காட்சியை நீக்கி, நாஞ்சில் சம்பத்தை மாற்றாக அக்காட்சியில் கொண்டு வந்துள்ளது படக்குழு. அதோடு நில்லாமல், கீழே எழுத்தாக, கோமாளி படத்தில் இருந்து ரஜினி சம்பந்தப்பட்ட காட்சி நீக்கம் எனப் பதிந்து, படையப்பா ரஜினி செந்திலைக் கலாய்ப்பது போல் ரஜினி ரசிகர்களைச் சாமர்த்தியமாகக் கலாய்த்துள்ளது படக்குழு. ஒரு விபத்தில் 16 வருடங்கள் கோமாவில் விழுந்து விடுகிறான் ரவி. அவன் அதிலிருந்து மீண்டதும், அசுர மாற்றம் அடைந்திருக்கும் அனைத்தையும் பார்த்துக் குழம்பி, […]

17/08/2019 Dinesh R
ஜெயம் ரவி – ஸ்கிரீன் சீனில் 3 படம் சினிமா

ஜெயம் ரவி – ஸ்கிரீன் சீனில் 3 படம்

மாஸ் படங்களில் நடித்து கைத்தட்டல்களையும், விசில் ஒலியையும் பெறும் அதே நேரத்தில், நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் ஒரு பகுதியாக இருந்து பாராட்டுகளையும் பெறுகிறார் ஜெயம் ரவி. அவரது அசுர வளர்ச்சி ஒரு புறம் இருக்க, அவர் தயாரிப்பாளர்கள் மிகவும் விரும்பும் நடிகராகவும் இருக்கிறார். இதற்கு மிகச்சரியான உதாரணம் என்னவென்றால் ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் 3 திரைப்படங்களில் நடிக்க ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்திருக்கிறது.  “நான் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனதை விட, பல […]

25/02/2019 Dinesh R
அடங்க மறு விமர்சனம் சினிமா

அடங்க மறு விமர்சனம்

நேர்மையான அதிகாரியாகப் பணி புரிய நினைக்கும் சப் இன்ஸ்பெக்டர் சுபாஷ், தன் உயரதிகாரிகளால் பணிந்து போகச் சொல்லி அடக்கப்படுகிறார். அதையும் மீறி, அவர் நேர்மையாக இருக்க முயல்வதால் அவரது குடும்பத்தையே இழக்கிறார். அதன் பிறகாவது சுபாஷ் அடங்குவான் என நினைத்தவர்களுக்கு, சுபாஷ் கொடுக்கும் பதிலடி தான் படம். பழிவாங்கும் கதை என ஒரு வரியில் சுருக்கலாம். எனினும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறு செய்யப் பயப்படவேண்டும் என்பதுதான் படத்தின் தீம். சகல வித்தைகளையும் கரைத்துக் குடித்த ஒரு ஹை-டெக் […]

23/12/2018 Dinesh R
டிக்: டிக்: டிக் விமர்சனம் சினிமா

டிக்: டிக்: டிக் விமர்சனம்

வங்காள விரிகுடாவில் விழவிருக்கும் விண்கல்லைப் பூமிக்கு வெளியேவே அணு குண்டை ஏவிப் பிளக்கவேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு, ஆந்திரம், இலங்கை ஆகிய பகுதிகளில் சுனாமி ஏற்பட்டு, சுமார் 4 கோடி மக்கள் அழிந்துவிடுவர். இந்தியத் தற்காப்புப் படை, எப்படி நான்கு கோடி மக்களைக் காப்பாற்றுகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. இந்தியாவின் முதல் ஸ்பேஸ் மூவி என்ற வகையில் அசத்தியுள்ளனர் என்றே சொல்லவேண்டும். கன்னி முயற்சியில், நடை தளருவது இயற்கை எனினும் விழாமல் இலக்கை அடைவது சாதனையே! அந்தச் சாதனையை […]

22/06/2018 Dinesh R
போகன் விமர்சனம் சினிமா

போகன் விமர்சனம்

தனி ஒருவன் வெற்றி ஜோடியான அரவிந்த் சாமி – ஜெயம் ரவி மீண்டும் இணைகிறார் என்பதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்குப் பிரதான காரணம். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளனர் என்றே சொல்லவேண்டும். ‘போகன்’ என்றால் புலன்களால் பெறும் இன்பத்தை அனுபவிப்பவன் எனப் பொருள் கொள்ளலாம். அப்படி, வாழ்விலுள்ள ராஜ சுகம் அனைத்தையும் அனுபவிக்கும் பெரும் இச்சையுடைய போகனாக அரவிந்த் சாமி கலக்கியுள்ளார். தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ள, ஆய கலைகளில் 52வது கலையான ‘பரகாயப் பிரவேசம்’ எனும் […]

03/02/2017 Dinesh R
ஃபேண்டசியா விழாவில் மிருதன் சினிமா

ஃபேண்டசியா விழாவில் மிருதன்

இன, மொழி, தேசிய பேதமற்று உலக மக்கள் அனைவரையும் கவரும் கண்ணியாக இருக்கும் விஷயங்களில் பிரதானமானது சினிமாவே! சமீபமாக தமிழ் சினிமாக்களும் உலகளாவிய அளவில் கவனம் பெறுவது குறிப்பிடத்தக்கது. அப்படிக் கவனம் பெறும் பட்டியலில், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மிருதன் திரைப்படமும் சேர்ந்துள்ளது. கனடாவில் நடைபெறும், ‘ஃபேண்டசியா சர்வதேசத் திரைப்படா விழா 2016’ -இற்கு மிருதன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் முதல் ஜோம்பி படமான மிருதன், அதன் பிரம்மாண்டட்தாலும் நேர்த்தியான திரைக்கதையாலும் இப்பொழுது உலகளாவிய ரசிகர்களையும் […]

08/05/2016 Dinesh R
மிருதன் விமர்சனம் சினிமா

மிருதன் விமர்சனம்

மிருதம் – பிணம்; மிருதன் – பிணமாய் வாழ்பவன் (ஜோம்பி) ஒரு வைரஸால் மனிதர்கள் மிருதர்களாக உருமாறுகின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் கதை. அமைச்சராக வரும் R.N.R. மனோகர், அவரது அறிமுகக் காட்சியைத் மற்ற காட்சிகளில் எல்லாம் அதகளப்படுத்துகிறார். செக் போஸ்ட்டில் அவர் கெத்து காட்டி விட்டு, ஜெயம் ரவியைப் பார்த்து, “இதுக்குத்தான் தம்பி அரசியலில் கொஞ்சம் டச் வேணுங்கிறது” எனும் பொழுது திரையரங்கம் சிரிப்பொலியால் அதிர்கிறது. அதே போல், காளி வெங்கட்டின் சுடும் திறமைக்கும் சிரிப்பொலி […]

20/02/2016 Dinesh R
பூலோகம் விமர்சனம் சினிமா

பூலோகம் விமர்சனம்

பூலோகம் என்ற குத்துச் சண்டை வீரனுக்கும், ஒரு தொலைக்காட்சி நிறுவன முதலாளிக்கும் நடக்கும் போராட்டம் தான் படத்தின் கதை. தொடக்கம் முதல் இறுதி வரை படம் பார்வையாளர்களைக் கட்டிப் போடுகிறது. சொல்லப் போனால், உலோகம் போன்ற இறுகிய உடம்புடனும், கனல் தெறிக்கும் பார்வையுடனும் பூலோகமாகக் கட்டிப் போடுகிறார் ஜெயம் ரவி. தனி ஒருவன் வெற்றியில் இருந்தே மீளாத ஜெயம் ரவிக்கு, 2015-ஐ மறக்கமாலிருக்க மற்றொரு வலுவான காரணமாக இப்படமும் சேர்ந்து கொள்ளும். “நான் ஒரு எச்சக்கல பொறுக்கி” […]

26/12/2015 Dinesh R