32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பூலோகம் விமர்சனம்

Dinesh R சேலம் Published: 26/12/2015 2 நிமிட வாசிப்பு Updated: 05/02/2016 சினிமா
எழுத்து அளவு:

Bhooloham Vimarsanam

பூலோகம் என்ற குத்துச் சண்டை வீரனுக்கும், ஒரு தொலைக்காட்சி நிறுவன முதலாளிக்கும் நடக்கும் போராட்டம் தான் படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தொடக்கம் முதல் இறுதி வரை படம் பார்வையாளர்களைக் கட்டிப் போடுகிறது. சொல்லப் போனால், உலோகம் போன்ற இறுகிய உடம்புடனும், கனல் தெறிக்கும் பார்வையுடனும் பூலோகமாகக் கட்டிப் போடுகிறார் ஜெயம் ரவி. தனி ஒருவன் வெற்றியில் இருந்தே மீளாத ஜெயம் ரவிக்கு, 2015-ஐ மறக்கமாலிருக்க மற்றொரு வலுவான காரணமாக இப்படமும் சேர்ந்து கொள்ளும்.

“நான் ஒரு எச்சக்கல பொறுக்கி” என தன் ஊழியர்கள் முன்பே சொல்லிக் கொள்ளும் ‘மிகக் கெட்ட முதலாளி’யாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். வடச்சென்னையின் மனிதர்களை இயல்பாகச் சித்தரித்திருக்கும் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன், வில்லன்களைக் கோமாளிகளாகச் சித்தரித்துள்ளார். தன் பெரிய கனவுகளையும் லட்சியங்களையும் குயுக்தியையும் பார்வையாளர்களுக்குப் பேசியே கடத்துகிறார்; அதே போல், ஸ்கர்ட் அணிந்து வரும் நாதன் ஜோன்ஸ், ஹிஸ்டீரியா வந்தது போல் கத்திக் கொண்டிருக்கும் அர்பித் ரன்கா, பணக்கார மாணவன் நாராயணன் என லாஜிக்கற்ற வலிந்து திணிக்கப்பட்ட வில்லத்தனங்கள் அயர்ச்சியை அளிக்கின்றன. மேலும், ஜனநாதன் தனது வசனங்களின் மூலம், குத்துச் சண்டையைக் காட்டுமிராண்டித்தனமானது என்றும், கொலைக்களம் போலவும் சித்தரிக்கிறார்.

குத்துச்சண்டை என்பது அழகானதொரு “தற்காப்புக் கலை”. அதன் பெருமையை உணர்த்தும் ஒரே ஒரு வசனம் கூட படத்தில் இல்லை. பெளன்ஸராகப் போகலாம், வி.ஐ.பி.க்கு பாடி கார்டாகப் போகலாம், சேட்டுகளுக்கு வட்டி வசூலிக்கும் ஆளாகப் போகலாம் என பாக்ஸர்களை மலிவாகவே சித்தரித்துள்ளனர். ‘ரிங்கில் மோத வரும் ஆளை எதிரியாகத்தான் பாவிப்பேன். ஆம், அது தப்பு. ஆக, பாக்ஸிங்கைத் துறப்பேன்’ என்கிறார் பூலோகம். முதலாளித்துவத்தை எதிர்க்க பூலோகம் பாக்ஸிங்கில் ஈடுபடுகிறாரே தவிர, பாக்ஸிங் மீதுள்ள காதலால் அன்று. அந்தக் கணத்தில், படம் ‘ஸ்போர்ட்ஸ்’ படமென்ற அந்தஸ்தை முற்றிலுமாக இழந்துவிடுகிறது. படத்தின் உண்மையான நாயகன் எனப் பார்த்தால், பாக்ஸிங்கைக் காதலிக்கும் “ஆறுமுகம்” கதாபாத்திரம்தான்.

Trisha Tattoo in Thighs

காதலிக்க மட்டும் என்றில்லாமல், நாயகனின் லட்சியத்தில் அக்கறை எடுத்து அவருக்கு ‘ட்ரெயினிங்’ தரும் ஆசானாகவும் அசத்துகிறார் த்ரிஷா. தான் உயிருக்கு உயிராய்க் காதலிக்கும் பூலோகத்தின் டேட்டூவை தன் உடலெங்கும் வரைந்து கொள்ளும் கெளரி சிந்துவாக வருகிறார் த்ரிஷா. தொப்புளுக்குக் கீழ் அடித்தால் ‘ஃபவுல்’ என்ற விதியில் ஊறிய பூலோகத்துக்கு, த்ரிஷாவின் கால்களில் (தொடையில்) வரையப்படும் உருவ டேட்டூக்களை அவர் தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதவில்லை. காதலின் வெளிப்பாடாக எண்ணி மகிழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டன்ட் மாஸ்டர் லார்னெல் ஸ்டோவெலின் சண்டைக் காட்சிகளும், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் நம்மை சீட் நுனியில் உட்கார வைத்து விடுகிறது.

பூலோகம், பிரம்மாண்டமானதொரு ஆக்ஷன் என்டர்டெயினர்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.