
மங்காத்தா விமர்சனம்
மங்காத்தா - வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அஜீத்தின் 50வது படம் என்ற ஒன்றே படத்தின் எதிர்பார்ப்பை தாறுமாறாக எகிற செய்தது. அந்த எதிர்ப்பார்ப்பை வீண் செய்யாமல் படு அமர்க்களமாய் திரையரங்கைக் கலக்கி வருகிறது மங்காத்தா.தற்காலிக வேலை நீக்கத்தில் உள்ள காவல் துறை அதிகாரி விநாயக், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆறுமுக செட்டியாரிடமிருந்து பெரும் தொகையை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார். அதே திட்டத்துடன் இருக்கும் நான்கு இளைஞர்களுடன் கூட்டு சேர்ந்து, ஆறுமுக செட்டியாரிடமிருந்து கொள்ளையடிக்கிறார். கொள்ளையடித்த பணம் கொள்ளையர்களைச் சுற்றலில் விடுகிறது. இறுதியாக பணம் யார் கையில் சேர்ந்தது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.விநாயக் மகாதேவனாக அஜித். தமிழ்த் திரையுலகம் கண்டெடுத்த நாயகனுக்குரிய இலக்கணத்தைத் தூக்கிப் போட்டு மிதித்து துவம்சம் பண்ணி விட்டார் தல. அசல் நாயகன் என அஜீத் ரசிகர்கள் மார் தட்டிக் க...

