Shadow

Tag: பிரபுதேவா ஸ்டுடியோஸ்

தேவி தமன்னா

தேவி தமன்னா

சினிமா, திரைச் செய்தி
தேவி படம் நாயகியை மையப்படுத்தும் கதையாச்சே! நீங்க இந்தப் படத்தில் எப்படி? உங்களுக்கு ஓகேவா மாஸ்டர்?' "ரஜினி சாரே சந்திரமுகி பண்ணார். எனக்கென்ன சார்?" என பிரபுதேவா இயக்குநர் ஏ.எல்.விஜய்க்குப் பதில் சொல்லியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று 'வுட்'களுக்கும் நன்றாகத் தெரிந்த பிரபு தேவாவை முதல் நாயகனாகவும்; மும்பையில் பிரபுதேவாவின் பக்கத்து வீட்டுக்காரரும், ஜாக்கி சான் படத்தில் பிரதான பாத்திரம் ஏற்றிருப்பவருமான சோனி சூட்-டை இரண்டாம் கதாநாயகனாகவும் நியமித்துள்ளனர் பிரபுதேவா ஸ்டுடியோஸ். ஆனால், மூன்று மொழிகளுக்கான தேவியாக யாரைத் தேர்வு செய்வதென்ற கேள்வி இயக்குநர் விஜய் முன் பிரம்மாண்டமாய் எழுந்துள்ளது. பிரம்மாண்டம் என்றால் பாகுபலி. ஆக, மூன்று மொழிகளிலும் பட்டையைக் கிளப்பிய பாகுபலியின் குந்தலதேசத்து அவந்திகாவைத் தேவியாக்கி விடலாமென விஜய் முடிவெடுத்து, தமன்னாவிடம் கதையைச் சொல்லியுள்ளார் வி...