
LIGER | மைக் டைசன் – விஜய் தேவரகொண்டா
பிரபல குத்து சண்டை வீரர் மைக் டைசன், விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்திய திரைப்படமான LIGER (Saala Crossbreed ) படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்தார்!இந்திய அளவில் பிரபலமாகியிருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள LIGER (Saala Crossbreed) படத்தின் முழுப் படப்பிடிப்பு பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் இத்திரைப்படத்தின் மூலம் உலகப்புகழ் குத்து சண்டை வீரர் மைக் டைசன் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.
மைக் டைசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அமெரிக்காவில் விஜய் தேவரகொண்டா மற்றும் மற்ற நட்சத்திரங்களுடன் இணைந்து படமாக்கப்பட்டது என்பது தெரிந்ததே. தற்போது, மைக் டைசன் படத்தின் டப்பிங்கை முடித்துள்ளார். இது குறித்து ஒரு வீட...


