
மும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு
உலகெங்கும் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்வில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விஷயமும் பெரும் கேள்விக்குறியாக இருந்தது. தேர்வுக்கு எப்படி தயாராவது? இப்போதிருக்கும் இறுக்கமான மனநிலையில் தேர்வை எப்படி எதிர்கொள்வது? இப்படி, பத்தாம் வகுப்பு மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் மனச்சிக்கலில் இருந்தார்கள். இந்நிலையில் மாணவர்களின் இறுக்கத்தைப் போக்கும் விதமாக மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று அறிவித்து மாணவர்களின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையைக் கொடுத்தார். இந்நிலையில் தமிழ்நாட்டைப் போலவே மும்பைத் தேர்வு மையத்தில் பதிவு செய்த தமிழக அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற 69 மும்பை மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும் படி, மகாராஷ்டிரா அம்மா பேரவை செயலாளர் திரு.ராஜேந்திர ராஜன் மாண்புமிகு தமிழக முதல்வரு...


