Shadow

Tag: ராட்சசி திரைப்படம்

ராட்சசி விமர்சனம்

ராட்சசி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெரும்பாலானோரின் பொதுப்புத்தியில் ஓர் அரசுப்பள்ளியைப் பற்றிய பிம்பம் எவ்வாறு பதிந்துள்ளதோ, அப்படி ஓர் அரசுப்பள்ளி தான் விருதுநகர் மாவட்டம் R.புதூரில் இருக்கும் அந்தப் பள்ளி. அங்கு தலைமை ஆசிரியையாக கீதா ராணி பொறுப்பெடுத்துத் தன் சாட்டையைச் சுழற்ற, அவருக்கு 'ராட்சசி' எனும் அடைமொழி கிடைக்கிறது. சாட்டை படத்தை நிறையவே ஞாபகப்படுத்துகிறது. குறைந்தபட்சம், அதையொரு சவாலாக எடுத்துக் கொண்டு வேறு பரிமாணத்தில் பயணிக்கக் கூடப் படம் முயற்சி செய்யவில்லை. நேரடியாக, 'இது தவறு, இப்படிச் செய்யலாம்' எனச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் தலைமை ஆசிரியையான கீதா ராணி டீச்சர். படத்தில் ஏகத்துக்கும் வில்லன்கள் உண்டு. துணைத் தலைமை ஆசிரியர், தனியார் பள்ளி நிறுவனர், உள்ளூர் அரசியல்வாதி போன்றோர் தலைமை ஆசிரியைக்குக் குடைச்சல் தருவதை முதன்மை லட்சியமாகக் கொண்டுள்ளனர். உண்மையின் உரைகல்லாகவும், அவலங்களைச் சுட்டிக் காட...
“அம்மா, பெண், நடிகை என்ற வரிசை” – மகிழ்ச்சியில் ஜோதிகா

“அம்மா, பெண், நடிகை என்ற வரிசை” – மகிழ்ச்சியில் ஜோதிகா

சினிமா, திரைச் செய்தி
சூர்யா, கார்த்தியை மட்டும் வைத்து ட்ரீம் வாரியர் நிறுவனம் படம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். நானாக தான் போய் வாய்ப்பைக் கேட்டேன். அவர்கள் எந்த சின்ன படங்கள் தயாரித்தாலும் வெற்றியடைகிறது. அவர்களது கதைத் தேர்வு அற்புதமாக இருக்கிறது. ஆகையால் தான் முதல் முறையாக புது இயக்குநருடன் பணிபுரிகிறேன். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் இருவருமே அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அவர்களது உதவி இந்தப் படத்தில் நிறையவே இருந்தது. இயக்குநர் கெளதம் எனக்கு 2 மணி நேரம் கதை சொன்னார். அரசாங்கப் பள்ளி எப்படி நடக்க வேண்டும் என்ற மெசேஜ் ஏற்கெனவே வந்திருக்கிறது. ஆனாலும், இந்தக் கதை அவ்வளவு புதிதாக இருந்தது. இதிலிருக்கும் சின்னச் சின்ன விஷயங்கள் அற்புதமாக இருக்கும். இதிலுள்ள காதல் ட்ராக் புதிதாக இருக்கும். ஒரு அப்பா, பெண்ணோட ரிலேஷன்சிப் புதிதாக இருக்கும். இயக்குநர் கல்யாணத்துக்கு முன்பு எப்படி இவ்வளவு அனுபவமாக வாய்ந்தவரா...