தனுஷின் ‘வாத்தி’ படத்தினுடைய விநியோகப் பஞ்சாயத்து
தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியது. கலைப்புலி S. தாணு தயாரிப்பில் வெளிவந்த ‘நானே வருவேன்’ திரைப்படம் தரமான படம் என்ற பெயரை எடுத்த போதிலும், பொன்னியின் செல்வனின் வெற்றியில் பெரிதும் வெளியில் தெரியாமல் மறைந்துவிட்டது. இருப்பினும் அந்தப் படம் தமிழகம் முழுவதும் 13 கோடி வசூல் செய்தது. இதுவும் ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் ‘வாத்தி’. தெலுங்கு தயாரிப்பாளர் வம்சி தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தின், ‘வா.. வாத்தி’ பாடல் இளைஞர்களால் கொண்டாடப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்தத் திரைப்படத்தின் விநியோக உரிமை சென்னையில் உள்ள சில மீடியேட்டர்களின் தவறான செயல்பாடுகளால் சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது.
வாத்தி திரைபடம் டிசம்பர் 2 ஆம் தேத...