
சொட்ட சொட்ட நனையுது விமர்சனம் | Sotta Sotta Nanaiyuthu review
காரைக்குடியைச் சேர்ந்த செல்வந்தனான ராஜாவிற்கு தலையில் சொட்டை தோன்றி முழு வழுக்கையாக மாறிவிடுகிறது. அதனால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும் ராஜாவிற்குக் கல்யாணமும் தள்ளிப் போகிறது. எதிர் வீட்டில் வசிக்கும் ராயல் பாட்டியின் வீட்டுக்குப் படிப்பு முடித்து வரும் அவரது பேத்தி பிரியாவை ராஜா விரும்ப, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயமாகிறது. இந்நிலையில், கல்யாணத்துக்கு முன் தினம் கல்யாணத்தை ராஜாவே நிறுத்துகிறான். கல்யாணத்தை ராஜா ஏன் நிறுத்தினான், அதன் பின் என்னாகிறது என்பதே படத்தின் கதை.
அறிமுக இயக்குநரான நவீத் S. ஃபரீத் அவர்களின் தந்தை ஷேக் ஃபரீத், நாயகனின் தந்தை பண்ணை பரமசிவமாக நடித்துள்ளார். ப்ரோக்கர் குலுக்கல் குமரேசனாக ரோபோ சங்கர் நடித்துள்ளார். நாயகனின் கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்யும் ராக்கெடியாக விஜய் டிவி புகழ் வருகிறார். இப்படத்திற்கு வசனமும் திரைக்கதையும் எழுதி, நண்பனின் நாயக...



