32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

Amazon Prime

73 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 5 / 5
செய்திகள் வரிசை (பக்கம் 5)
“காணாமல் போன 2 காளைகளைத் தேடி!” – இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் சினிமா

“காணாமல் போன 2 காளைகளைத் தேடி!” – இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்

அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை இன்று (செப். 15) நடிகர் சூர்யா வெளியிட்டார். எளிய மக்களின் சமூகவியல் வாழ்க்கை பற்றி நையாண்டித்தனத்துடன் சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம், செப்டம்பர் 24ஆம் தேதி அன்று, 240 நாடுகளிலும் […]

15/09/2021 Dinesh R
மாறா விமர்சனம் சினிமா

மாறா விமர்சனம்

மாறாவை முற்றிலும் வேறொரு படமாக எடுத்திருக்கலாம். சார்லியோட பலமே, அதில் பதில்களை விட கேள்விகள் தான் அதிகம். சார்லியோட நாடோடி வாழ்க்கைக்கான காரணம் அவனோட வாழ்க்கை தத்துவம் சார்ந்தது. அவன் ஏதோ ஒரு விஷயத்தைத் தேடி அலையவில்லை. அவனது தேடல் அகம் சார்ந்தது. அது தான் அந்தப் படத்தோட ஆன்மா. பார்வதி தேடிப் போவது அவனோட அபாரமான கலைக்காக இல்லை. அவனோட அந்த intriguing வாழ்க்கைமுறைக்காகத்தான். சார்லி அந்தப் படத்தில் ஒரு சூப்பர் ஹீரோ. ஏனெனில் சார்லியை […]

13/01/2021 Dinesh R
சூரரைப் போற்று விமர்சனம் OTT

சூரரைப் போற்று விமர்சனம்

சூரன் என்றால் அநாயாசமான திறமை படைத்தவன் எனப் பொருள். விமானத்தில் செல்வதென்பதே எட்டாக்கனியாக இருக்கும் ஒருவன், ஏர்லைன்ஸ் ஆரம்பித்துக் காட்டுகிறேன் என்ற கனவு கண்டு, அதை நனவாக்கிய அசாத்திய சாகசம்தான் ‘சூரரைப் போற்று’ படத்தின் கதை. Simply fly! (தமிழில்: வானமே எல்லை) என்ற சுயசரிதைப் புத்தகத்தைத் தழுவி, ஒரு சுவாரசியமான புனைவாக்கத்தைக் கொடுத்துள்ளார் சுதா கொங்கரா. திரையரங்கில் பார்க்க வேண்டிய படமென்ற ஆவலை ஏற்படுத்தியுள்ளது படம். திரையரங்கில் வெளியிட்டாலும், ரசிகர்கள் செல்லத் தயாராகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், […]

12/11/2020 Dinesh R
சைலன்ஸ் விமர்சனம் OTT

சைலன்ஸ் விமர்சனம்

சியாட்டல் வாழ் இசை கலைஞரான அந்தோனி கொன்சால்வேஸ் மர்மமான முறையில் ஒரு பேய் வீட்டில் கொல்லப்படுகிறார். காது கேட்காத, வாய் பேச முடியாத அவரது காதலி சாக்‌ஷியும் அமானுஷ்யமான முறையில் தாக்கப்படுகிறார். கொலைக்குக் காரணம் அமானுஷ்யம் சூழ்ந்த அந்த வீட்டின் பேய் என்று அனைவரும் நம்பும் பட்சத்தில், கொலையாளியைப் பிடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார் காவல்துறை அதிகாரியான மகாலக்‌ஷ்மி. கொலைக்கான காரணத்தையும், கர்த்தாவையும் மகாலக்‌ஷ்மி எப்படிக் கண்டுபிடித்தார் என்பதுதான் படத்தின் கதை. தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் எடுக்கப்பட்ட […]

05/10/2020 Dinesh R
காமிக்ஸ்தான் போட்டியாளர்கள் சமூகம்

காமிக்ஸ்தான் போட்டியாளர்கள்

பகலில் ஐடி ஊழியராகவும், மாலையில் ஸ்டான்ட்-அப் காமெடியனாகவும் இருக்கும் மாயாண்டி கருணாநிதி, நகைச்சுவைத் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று கனவு கண்டவர். பெங்களூருவைச் சேர்ந்த மாயாண்டி, மெதுவாக, உறுதியாக தனது லட்சியத்தை நோக்கி முன்னேறி வருகிறார். சென்னை, கோவை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் 300க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை மாயாண்டி நடத்தியிருக்கிறார். பல்வேறு கார்ப்ரேட் நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் பார்ட்டிகளிலும் மக்களைச் சிரிக்க வைத்துள்ளார். அடிப்படையில் […]

11/09/2020 Dinesh R
அமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’ சமூகம்

அமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’

இந்தி மொழியில் வெற்றிகரமான சீஸன்களுக்குப் பிறகு, அமேசான் ப்ரைம் வீடியோவின் பிரபலமான ஸ்டான்ட்-அப் காமெடி நிகழ்ச்சியான காமிக்ஸ்தான் தமிழிலும் அறிமுகமாகிறது. மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், ரசிகர்களுக்குப் பிடித்த, அமேசானின் அசல் தயாரிப்பான காமிக்ஸ்தான் நிகழ்ச்சியின் தமிழ் வடிவம், காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ட்ரெய்லர், சமீபத்தில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தால் வெளியிடப்பட்டது. ப்ரைம் வீடியோ, தமிழ் மொழியில் அசல் தயாரிப்புக்களை தொடங்கியிருப்பதற்கான முதல் படியே இந்த நிகழ்ச்சியின் அறிமுகம். இந்தப் புதிய நிகழ்ச்சியில், தமிழின் […]

08/09/2020 Dinesh R
வி | நானியின் 25வது படம் சினிமா

வி | நானியின் 25வது படம்

இயக்குநர் மோகன கிருஷ்ணா இந்திராகாந்தியுடன் நானியின் மூன்றாவது திரைப்படம் இது. நானியின் அறிமுகத் திரைப்படமான ‘ஆஷ்தா சம்மா’வின் இயக்குநரும் மோகன கிருஷ்ணாவே! தனது 12 வருட பயணம் குறித்துப் பேசியிருக்கும் நானி, “நான் எப்போதுமே நல்ல நடிகனாக, ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்குத் தருபவனாக இருக்க வேண்டும் என்றே நினைத்தேன். ‘ஆஷ்தா சம்மா’ வெளியாகி 12 வருடங்கள் கடந்து விட்டன. ‘வி’ திரைப்படம் மூலம் அற்புதமான மனிதர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தெலுங்கு ரசிகர்கள் என்னை அவர்களில் […]

04/09/2020 Dinesh R
காமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல் சமூகம்

காமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல்

அமேசான் ப்ரைம் வீடியோவின் பிரபலமான ஸ்டாண்ட் அப் காமெடியான காமிக்ஸ்டான் இந்தியில் 2 சீசன்களாக வெற்றிகரமாக ஓடிய பிறகு அதன் தமிழ் வெர்ஷனை இப்போது பெறுகிறது. பிரபல நகைச்சுவை நடிகர்களான பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் 8 எபிசோடுகளுக்கு போட்டியாளர்களுக்கு ஆலோசகர்களாகவும் நடுவர்களாகவும் இருந்து அடுத்த சிறந்த ஸ்டேண்ட் – அப் நகைச்சுவைக் கலைஞரைத் தேர்ந்தெடுப்பார்கள். மும்பை, இந்தியா, 3 செப்டம்பர் 2020 – அமேசான் ப்ரைம் வீடியோ இன்று காமிக்ஸ்தான் செம […]

03/09/2020 Dinesh R
காமிக்ஸ்தான்: அமேசான் Vs ட்விட்டர் காமெடியன்ஸ் சமூகம்

காமிக்ஸ்தான்: அமேசான் Vs ட்விட்டர் காமெடியன்ஸ்

ரசிகர்களுக்குப் புதிய படைப்புகளைத் தருவதில் அமேசான் ப்ரைம் வீடியோ முன்னோடியாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் அவர்கள் விளையாட்டுகளும் சுவாரசியமானவையே. முன்னதாக இன்று, ப்ரைம் வீடியோ இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து ஒரு ட்வீட் பகிரப்பட்டது. அதில் “ஹே மச்சான், ஒரு ஜோக் சொல்லட்டா. ஓப்பன் மைக்குக்கும், 2020 கிரிக்கெட் மைதானத்துக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா? ரெண்டுத்தையுமே நேர்ல பார்க்க ரசிகர்கள் வர மாட்டாங்க #OruJokeSollata 🤪 @evamkarthik @Comedy_Praveen #ComicstaanSemmaComedyPa” Hey machan #OruJokeSollata, what’s common […]

02/09/2020 Dinesh R
சூஃபியும் சுஜாதயும் விமர்சனம் OTT

சூஃபியும் சுஜாதயும் விமர்சனம்

ஒரு சூஃபிக்கும், சுஜாதா எனும் வாய் பேசா முடியாத பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. “சூஃபிகள், ஆடவும் பாடவும் தெரிந்த துறவிகள்” என்பார் சுஜாதாவின் பாட்டி. சூஃபியை, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவராகப் பார்ப்பார் சுஜாதாவின் அப்பா. உண்மையில், சூஃபிகள் மதங்களைக் கடந்தவர்கள். சூஃபிகளை, இறைச் சிந்தனையில் வாழும் ஞானிகள் என்று சொல்லலாம். பொதுவாகத் துறவு மனநிலை கொண்டவர்களாக இருப்பார்களே அன்றி, கட்டாயமாகத் துறவியாக இருந்தே ஆகவேண்டிய கட்டாயமில்லை. மதத்தை மீறிக் கலைகளின் வாயிலாக இறைவனின் ஏகத்துவத்தை விசாலப்படுத்துவதே சூஃபிகளின் […]

04/07/2020 Dinesh R
பெண்குயின் விமர்சனம் OTT

பெண்குயின் விமர்சனம்

ரிதம் எனும் பெண்ணின் மகன் காணாமல் போய், ஆறு வருடங்களுக்குப் பின் கிடைக்கின்றான். அவனை யார் கடத்தினார்கள், அந்தச் சிறுவனுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரிந்து கொள்ள ரிதம் நினைக்கிறார். அவரால் அதைத் தெரிந்து கொள்ள முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை. “ஓப்பன் பண்ணா, காட்டுக்கு நடுவுல ‘மதர் ஆஃப் நேச்சர்’ சிலை. ஒரு கருப்பு நாய், தத்தித் தத்தி நடக்கும் சின்ன பையன், சிலைக்குப் பின்னாடியிருந்து மஞ்சள் நிறக் குடையில் சார்லி சாப்ளின் முகமூடி அணிந்த […]

20/06/2020 Dinesh R
பொன்மகள் வந்தாள் – 2 கோடி பார்வைகள் சினிமா

பொன்மகள் வந்தாள் – 2 கோடி பார்வைகள்

அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூட்யூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது. ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரைப் பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்தியச் சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 […]

23/05/2020 Dinesh R