32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

Amazon Prime

73 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 4 / 5
செய்திகள் வரிசை (பக்கம் 4)
மகான் விமர்சனம் சினிமா

மகான் விமர்சனம்

காந்தியக் கொள்கைகளின்பால் பிடிப்புக் கொண்ட குடும்பத்தில் பிறந்ததால், நாயகனுக்கு ‘காந்தி மகான்’ எனப் பெயர் வைக்கப்படுகிறது. அச்சிறுவனின் முதுகு தோள் உரிக்கப்பட்டு காந்தியக் கொள்கைகள் திணிக்கப்படுகிறது. உள்ளூற உணர்ந்து, விருப்பத்துடன் இல்லாமல் கடமைக்கெனக் காந்தியத்தைக் கடைபிடிக்கப்படுவதால் ஏற்படும் அழுத்தம், ஒருநாள் நீர்க்குமிழி போல் வெடிக்கிறது. அதன் பின் காந்தி மகான் வாழ்க்கை எதிர்பாராத திசையில் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டோடுகிறது. அவ்வெள்ளத்தைத் தடுக்கும் அணையாக, மகானின் மைந்தன் ‘தாதா’பாய் நெளரோஜி வந்து சேருகிறான். காந்தியக் கொள்கைகளைத் தூக்கி […]

10/02/2022 Dinesh R
மகான் – தந்தை மகனின் அதிரடிப் பயணம் சினிமா

மகான் – தந்தை மகனின் அதிரடிப் பயணம்

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘மகான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோரும் நடித்துள்ளனர். பிப்ரவரி 10 ஆம் தேதி முதல், அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தைக் காணலாம். சீயான் விக்ரம் தன் மகன் துருவ் விக்ரமுடன் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் […]

24/01/2022 Dinesh R
ஆஸ்கர் விருது தகுதிப் பட்டியலில் ‘ஜெய்பீம்’ சினிமா

ஆஸ்கர் விருது தகுதிப் பட்டியலில் ‘ஜெய்பீம்’

ஆஸ்கர் விருது குழு, விருது பெறும் கௌரவத்திற்குத் தகுதியான இருநூற்று எழுபத்தாறு திரைப்படங்களின் பெயர்களை இன்று அறிவித்தது. தகுதியான 276 படங்களில், நடிகர் சூர்யா நடித்த “ஜெய்பீம்” திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தகுதி பட்டியலில் இடம் பிடித்த ஒரே தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு சூர்யாவின் “சூரரைப் போற்று” 93 ஆவது அகாடமி விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஜெய்பீம் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியான நொடியிலிருந்தே, […]

21/01/2022 Dinesh R
புத்தம்புது காலை விடியாதா… விமர்சனம் சினிமா

புத்தம்புது காலை விடியாதா… விமர்சனம்

முதல் லாக்-டவுனை அடிப்படையாகக் கொண்டு, ‘புத்தம்புது காலை’ எனும் ஐந்து குறும்படங்கள் கொண்ட ஆன்தாலஜி திரைப்படம் வெளியானது. தற்போது, பொங்கல் 2022 இன் சிறப்பு வெளியீடாக, ‘நியூ நார்மல்’ ஆகிவிட்ட இரண்டாவது லாக்-டவுனை மையமாக வைத்து, ‘புத்தம்புது காலை விடியாதா..’ எனும் ஆன்தாலஜி திரைப்படம் வெளியாகியுள்ளது. காதல், சுற்றி இறுக்கும் தனிமை, உற்றாரின் இழப்புகள், அவர்களது நினைவுகள் தரும் தாக்கம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் படம். லாக்-டவுனையும் ‘மாரி’த்தனமாக விளையாட்டாக அணுகியுள்ளார் இயக்குநர் பாலாஜி மோகன். அவரது […]

20/01/2022 Dinesh R
‘ஜெய்பீம்’ ஸ்பெஷல் வீடியோ | ஆஸ்கர் யூட்யூப் சேனல் காணொளிகள்

‘ஜெய்பீம்’ ஸ்பெஷல் வீடியோ | ஆஸ்கர் யூட்யூப் சேனல்

சூர்யா, லிஜோமோல் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றி பெற்ற ‘ஜெய் பீம்’, கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்’இன் அதிகாரபூர்வமான யூட்யூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது ‘ஜெய் பீம்’ படத்திற்குக் கிடைத்த உண்மையான மரியாதை என பலரும் பாராட்டுகிறார்கள். […]

18/01/2022 Dinesh R
புஷ்பா: தி ரைஸ் விமர்சனம் அயல் சினிமா

புஷ்பா: தி ரைஸ் விமர்சனம்

ஓரு தெலுங்கு சினிமாவை விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்வதா என்ற தயக்கம் என்னிடம் எப்போதுமே உண்டு. பார்வையாளர்களின் சிந்தனையை முடக்கிப் போடும் தெலுங்குத் திரையுலகின் ஹைப்பர் சினிமாத்தனமும், லாஜிக்கல் அத்து மீறல்களும் உலகமே அறிந்த ஒன்று. இதற்கு புஷ்பா மட்டும் விதி விலக்கா என்ன? இல்லை. இது அச்சு அசல் ஒரு தெலுங்கு சினிமாதான். அதே லட்சணங்களோடுதான் இந்தப் படமும் இருக்கிறது. ஆனாலும் என்னைக் கவர்ந்த சில அம்சங்கள் இதில் இடம் பெற்று இருப்பதை நான் குறிப்பிட்டு ஆக […]

10/01/2022 Dinesh R
புத்தம் புது காலை விடியாதா – இசை ஆல்பம் சினிமா

புத்தம் புது காலை விடியாதா – இசை ஆல்பம்

விரைவில் வரவுள்ள, ‘புத்தம் புது காலை விடியாதா…’ என்ற ஆன்தாலஜி படத்தின் இசை ஆல்பத்தை அமேசான் ப்ரைம் வீடியோ அறிமுகப்படுத்துகிறது ஜீ.வி.பிரகாஷ் குமார், ஷான் ரோல்டன், கேபர் வாசுகி, பிரதீப் குமார், கௌதம் வாசு வெங்கடேசன் மற்றும் கார்த்திகேய மூர்த்தி போன்ற தமிழ்த் துறையின் இசைக் கலைஞர்களின் தனித்துவமான கலவையையால் இந்த இசைத் தொகுப்பு. ஐந்து பகுதிகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு, பொங்கல் திருநாளை ஒட்டி ஜனவரி 14 அன்று இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240க்கும் மேற்பட்ட […]

08/01/2022 Dinesh R
புஷ்பா: தி ரைஸ் – அதிவிரைவு ரோலர் கோஸ்டர் சினிமா

புஷ்பா: தி ரைஸ் – அதிவிரைவு ரோலர் கோஸ்டர்

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா – தி ரைஸ்’ திரைப்படம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜனவரி 7 ஆம் தேதி அன்று அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியாவின் கூட்டுத் தயாரிப்பில் உருவான மெய்சிலிர்க்க வைக்கும் சண்டைக் காட்சிகள் நிறைந்த இத்திரைப்படத்தில், கதை நாயகனாக அல்லு அர்ஜூன் தோன்ற, அவரோடு ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள். ஃபஹத் ஃபாசில், தெலுங்கில் […]

05/01/2022 Dinesh R
புத்தம் புது காலை விடியாதா @ அமேசான் ப்ரைம் – ஜனவரி 14 முதல் சினிமா

புத்தம் புது காலை விடியாதா @ அமேசான் ப்ரைம் – ஜனவரி 14 முதல்

அமேசான் ப்ரைம் வீடியோவில், விரைவில் வெளிவரவுள்ள தமிழ் குறும்படங்கள் தொகுப்பான ‘புத்தம் புது காலை விடியாதா’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இப்படத்திலுள்ள ஒவ்வொரு கதையும் தனித்துவமானது, இருப்பினும் அவை அனைத்தும் தனிப்பட்ட முறையில் நம்பிக்கையைக் கண்டறிதல் மற்றும் மனித இணைப்பின் மூலம் புதிய தொடக்கங்களைப் பெறுவதைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளன. இவை நம்பிக்கை, காதல் மற்றும் இரண்டாவது வாய்ப்புகள் பற்றி இரண்டாவது கோவிட்-19 லாக்டவுனைச் சுற்றி அமைக்கப்பட்ட கதைகள். ஐந்து அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொகுப்பு, பொங்கல் பண்டிகைக் […]

04/01/2022 Dinesh R
MUDDY திரை விமர்சனம் அயல் சினிமா

MUDDY திரை விமர்சனம்

சகதியும் சேறும் நிரம்பிய கரடுமுரடான பாதையில், விறுவிறுப்பான கார் சேஸிங் (chasing) காட்சிகளை ரசிப்பவர்களுக்கான ஆக்ஷன் திரைப்படம். மட்டி ரேஸை (mud race) மையமாகக் கொண்டு, இந்திய சினிமாவில் வந்துள்ள முதல் படமிது. பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ்  பட நிறுவனம் சார்பில், டாக்டர் பிரகபல் இயக்கியுள்ள படம் மட்டி. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் மலையாளப் படமான இது, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. […]

10/12/2021 Dinesh R
ஜெய் பீம் விமர்சனம் OTT

ஜெய் பீம் விமர்சனம்

‘ஆர்ட்டிகிள் 15’ போல் ஒரு திரைப்படம் தமிழில் வராதா என்ற ஏக்கத்தைப் பூர்த்தி செய்துள்ளது ஜெய் பீம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், காண்பவர்கள் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கி வருகிறது. நம்முடன் வாழும் சக மனிதர்கள் இத்தகைய கொடுமைகளை அனுபவிக்கின்றனரா என பொதுச் சமூகத்தின் அங்கலாய்ப்பை சமூக ஊடகங்கள் எங்கும் காண முடிகிறது. படத்தின் மாபெரும் வெற்றிக்கு அவை கட்டியம் கூறுகின்றன. காவல்காரர்கள் எப்படி இருளர்கள் மீதும், குறவர்கள் மீதும் பொய் வழக்குகளைப் போட்டு, அவர்களின் […]

04/11/2021 Dinesh R
ஜெய் பீம் – பற்ற வைக்கும் சுடர் சினிமா

ஜெய் பீம் – பற்ற வைக்கும் சுடர்

வாய்மையே வெல்லும் என்ற நம்பிக்கையூட்டும் நற்செய்தியை, தீபாவளி அன்று வெளியாகும் சூர்யாவின் ’ஜெய் பீம்’ திரைப்படம் ரசிகர்கள் மனதில் சுடர் விடச் செய்யவுள்ளது.. ஜெய்பீம் படத்தின் டீஸரே, இப்படம் ஒரு நீதிமன்றம் சார்ந்த கதை என்பதையும், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான கதை என்பதையும் சொல்லியிருக்கிறது. குரலற்றவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க வழக்கறிஞர் சந்துருவாக நடிக்கிறார் சூர்யா. படத்தில் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா உலா வரும் அதே வேளையில், பிரகாஷ் ராஜ், லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், […]

27/10/2021 Dinesh R
உடன்பிறப்பே விமர்சனம் OTT

உடன்பிறப்பே விமர்சனம்

ஜோதிகாவின் 50 ஆவது படம். தனது இரண்டாவது இன்னிங்ஸில், நாயகியை மையப்படுத்தும் கதைகளாகத் தேர்வு செய்து அசத்தி வருகிறார். எல்லா வயதினருக்கும் இங்கே ஒரு வாழ்க்கையும் கதையும் உண்டு என்பதைத் தமிழ் சினிமா பொருட்படுத்துவதில்லை. நாயகனுக்கு எத்தனை வயதானாலும், நாயகியைச் சுற்றியோ, சுற்றி வர வைத்தோ காதல் செய்யும் கதாபாத்திரங்களையே ஆண் நடிகர்கள் விரும்ப, கதையின் நாயகியாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு தனக்கென்றொரு தனிப்பாதையை உருவாக்கி, அனைவருக்கும் முன்மாதிரியாக உருமாறியுள்ளார் ஜோதிகா. இவையெல்லாம், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட்டாலே […]

14/10/2021 Dinesh R
எளிய மக்களைக் காக்கும் சூரன் – ‘ஜெய் பீம்’ சினிமா

எளிய மக்களைக் காக்கும் சூரன் – ‘ஜெய் பீம்’

சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படம், இந்தியா மற்றும் 240 நாடுகளில், நவம்பர் 2ஆம் தேதி அன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. இயக்குநர் த. செ. ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்திருக்கிறார்கள். இப்படம் தெலுங்கிலும் வெளியாகிறது. பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார். இவருடன் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், நடிகைகள் ரஜிஷா விஜயன், […]

01/10/2021 Dinesh R
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம் OTT

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்

யார் ஆண்டாலும் கவலையில்லாமல் வாழ கெட்டப் பய காளியால் 1978 இல் முடிந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலையில், யார் ஆண்டாலும் அவர்களால் ஒரு பயனும் இல்லையென்ற விரக்தியிலேயே மக்கள் வாழ்கின்றனர். படத்தின் மையப்பகுதியாக அந்த விரக்தியே உழல்கிறது. பூச்சேரி எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த குன்னிமுத்து என்பவர் வளர்க்கும் காளை மாடுகளான வெள்ளையனும் கருப்பனும் காணாமல் போய் விடுகிறது. அவை சமூகத்தில் ஏற்படுத்தும் சலசலப்பைப் பற்றியும், அச்சலசலப்பு, மாடுகள் கிடைக்க எந்த அளவு உதவின என்பதாகப் பயணிக்கிறது படத்தின் […]

28/09/2021 Dinesh R