Shadow

Tag: Anbe Diana review

அன்பே டயனா விமர்சனம் | Anbe Diana review

அன்பே டயனா விமர்சனம் | Anbe Diana review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பெரம்பூர் பையனுக்கும், ஆங்கிலோ இந்தியன் பெண்ணுக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் ஆச்சா என்பதே அன்பே டயனா படத்தின் ஒரு வரிக்கதை. பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட ஏரியாவில் குடியிருக்கிறது ஹீரோ பாரி இளவழகனின் குடும்பம். அம்மா ரோஜா, அவர் சாதிப்பற்றுக் கொண்ட கண்டிப்பான அம்மா. கதாநாயகனுக்கு அம்மா என்றால் பயம். அதே போல்தான் கதாநாயகனின் அப்பா சேத்தனுக்கும். அக்கா ஒருவர், தன் கணவனோடு ஒரு மனக் கசப்பில் மூளை சார்ந்த நோய்மை கொண்ட மகளோடு தாய்வீட்டிலேயே இருக்கிறார். கதாநாயகனின் தம்பி அநியாயத்திற்கு சமர்த்து. இப்படியான கதாநாயகனின் குடும்பத்திற்குக் குட்டைப்பாவடையும், குடும்பக் குடியுமாக வாழும் நாயகி ரம்யா ரங்கநாதன் எப்படி செட்டாவார் என்ற கேள்விக்கான பதில் தான் படத்தின் மீதிக்கதை. ஜமா படத்தில் கதாபாத்திரத்தோடு அவரைப் பிரித்துப் பார்க்க முடியாத படி நடித்திருந்தார் பாரி இளவழகன். அப்படம் இன்றும் நெஞ்சில் பசுமையாக நிற்பதற...