அனுமனும் மயில்ராவணனும் விமர்சனம்
முதல்முறையாக இந்தியாவில் தயாராகியுள்ள இதிகாசக் கதையம்சம் உள்ள 3D அனிமேஷன் முழுநீளத் திரைப்படம், ‘அனுமனும் மயில்ராவணனும்’ ஆகும்.
இராமாயண போரின் கடைசி நாளுக்கு முந்தைய நாளில், தரையில் வீழ்ந்து கிடக்கும் ராவணனைப் பார்த்த ராமன், "நிராயுதபாணிகளைத் தாக்குவது தர்மம் ஆகாது. நீ இன்று போய் நாளை வா" என்கிறார். அன்றிரவு அவமானத்தில் பொறுமிக் கொண்டிருக்கும் ராவணனுக்கு, அவன் தலைகளில் ஒன்று, மாயாவி மயில்ராவணனைக் கொண்டு ராமனைக் கொல்வதற்கான யோசனையைச் சொல்கிறது.
அதற்கேற்ப மாயாவியான மயில்ராவணன், விபீஷ்ணனின் பலமான தற்காப்பை மீறி ராமனையும் லக்ஷ்மனனையும் கடத்தி விடுகிறான். தனியனாக அனுமன் எப்படி தன் பிரபுக்கள் இருவரையும் மீட்டார் என்பதே படத்தின் கதை.
இப்படத்தின் இயக்குநர் டாக்டர் எழில்வேந்தன் ஒரு பல் மருத்துவர், அனிமேஷன் துறையில் உள்ள ஆர்வத்தால் அதைப் பயின்று, பின் இங்கிலாந்து சென்று வார்னர் பிரதர்ஸ் உள்ளிட்ட ...