துபாயில் உருவாகும் முதல் தமிழ்ப்படம்
'அரபு தாக்கு' படத்தைப் பற்றி இயக்குநர் பிரான்ஸிஸ் பேசும் போது, “துபாயைக் கதைக்களமாகக் கொண்டு முதன்முதலாக தமிழில் தயாராகும் படமிது. தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமானவர்கள் வேலை தேடித் துபாய்க்குச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் படும் பாட்டையும், கடினமாக உழைத்து எப்படி முன்னேறுகிறார்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்களை எப்படிச் சாதனையாக்குகிறார்கள் என்பதைப் பற்றியும் அழகாகச் சொல்லவிருக்கிறோம். அதே போல் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளைப் பின்னணியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதுவரை ஏராளமான படங்கள் வெளியாகியிருக்கிறது. ஆனால், அரபு நாடான துபாயில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவிருக்கும் முதல் படம் இது தான்.
இயக்குநர் பரதன் இயக்கிய அதிதி என்ற படத்தில் அறிமுகமான நிகேஷ் ராம் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். தமிழில் முதன்முதலாக தமிழே தெரியாத பெர்குஸார் கொரல் (Ber...