
ராஜா ரங்குஸ்கி விமர்சனம்
கான்ஸ்டபிள் ராஜாக்கு எழுத்தாளர் ரங்குஸ்கி மீது பார்த்ததும் காதல் வந்துவிடுகிறது. யாரோ ஒரு அநாமதேய தொலைப்பேசி அழைப்பாளர்க்கும் ரங்குஸ்கி மீது காதல். அந்த அநாமதேய தொலைப்பேசி அழைப்பாளர், ராஜாவை ஒரு கொலைக் குற்றத்தில் லாகவமாகக் கோர்த்து விட்டுவிடுகிறான். அதிலிருந்து ராஜாவும் ரங்குஸ்கியும் எப்படி மீண்டனர் என்பதுதான் படத்தின் கதை.எழுத்தாளர் சுஜாதாவிற்குப் படத்தை டெடிகேட் செய்துள்ளனர். ரங்குஸ்கி என்பது எழுத்தாளர் சுஜாதாவின் இயற்பெயரான ரங்கராஜனின் செல்ல வடிவம். நாயகி, சுஜாதாவின் தீவிர ரசிகை என்பதால் தனது புனைப்பெயராகச் சூடிக் கொள்கிறாள். நாயகன் ராஜாவோ, சுஜாதாவின் அதி தீவிர வாசகன். அவனது வீட்டுச் சுவரில் சுஜாதாவின் புகைப்படங்கள். படத்தின் மர்டரி மிஸ்ட்ரியையும் சுஜாதாவின் பாணியில் சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குநர்.தனது பெயரில் பதியப்பட்ட சிம் நம்பரில், தனது குரலிலேயே பேசி அலைக்கழிக்கும் நபர் யாரெ...


