Shadow

Tag: Dharmadurai thirai vimarsanam

தர்மதுரை விமர்சனம்

தர்மதுரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெரும் பலம் பொருந்திய அமைப்புகளான குடும்பமும் சமூகமும் தனக்கெனப் பிரத்தியேகமான சில விதிமுறைகளை வைத்துள்ளன. அது, தனி நபர்களால் மீறப்படும் பொழுது, அமைப்பின் கண்ணுக்குத் தெரியா அதிகாரம் தனி நபர் விருப்பத்தை நசுக்க முயற்சி செய்யும். தனி நபரான தர்மதுரை, அவ்வமைப்புகளிடம் சிக்கி எப்படி மீள்கிறான் என்பதே படத்தின் கதை. காமராஜ் எனும் மருத்துவப் பேராசிரியராக ராஜேஷ் நடித்துள்ளார். முனியாண்டி என்ற இயற்பெயர் கொண்டவர், காமராஜரின் சத்துணவுத் திட்டத்தால் பயன்பெற்றவர் என்ற நன்றிக்காகத் தன் பெயரையே மாற்றிக் கொள்கிறார். ராஜேஷின் முதுகுக்குப் பின், 'முனியாண்டி' என சில மாணவர்கள் கத்துகின்றனர். அதனால் சுர்ரெனக் கோபம் வந்து விடுகிறது அமைதியை விரும்பும் சக மாணவரான தர்மதுரைக்கு. கத்திய ஹஸனின் மண்டையை உடைத்து விடுகிறார். முனியாண்டி என்ற பெயரோ, கபாலி என்ற பெயரோ உச்சரிக்கப்படக் கூடாத கேலிக்குரிய பெயரா என்ன!? 'ஹஸன் ...