Shadow

Tag: Dhoni movie

தோனி விமர்சனம்

தோனி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் வந்திருக்கும் முதல் படமிது. 'டூயட் மூவிஸ்' எனற அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் வரும் பொழுது Celebrating Cinema என்ற பதமும் தோன்றுகிறது. ஏனைய படங்களுடன் ஒப்பிடுகையில் அது உண்மை தானெனப்படுகிறது. 100% தேர்ச்சிக் கணக்கிற்காக மாணவர்கள் மற்றும் அவரது  பெற்றோர்கள் மீது பள்ளி நிர்வாகம் தரும் அழுத்தத்தைப் பற்றிப் பதிந்துள்ளது இப்படம். இளையராஜாவின் பின்னணி இசை படத்தின் கூடுதல் பலம். வெங்கட்ரமண சுப்ரமணியன் பதிவாளர் அலுவலகத்தில் கையூட்டு வாங்காமல் பணி புரியும் ஓர் உத்தம அரசு ஊழியர். தன் மகன் கார்த்திக்கையும், மகள் காவேரியையும் நல்ல (!?) தனியார் பள்ளியில் சக்திக்கு மீறி படிக்க வைக்கிறார். செலவுகளைச் சமாளிக்க ஊறுகாயும் தயாரித்து விற்கிறார். கல்வி தான் தன் பிள்ளைகளுக்குச் சொத்தாக இருக்கும் என நம்பும் அவரின் மகனுக்கோ கிரிக்கெட்டில் பெரும் ஆர்வம். பள்ளி நிர்வாகமோ கார்த்திக...