
“விவாகரத்து அவசியமா?” – இயக்குநர் பாண்டிராஜ் | தலைவன் தலைவி
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் பாண்டிராஜ், “'தலைவன் தலைவி' என்ற இந்தப் படத்தின் தலைப்பு தோன்றிய தருணங்களும் அற்புதமானது. இந்த படத்திற்கான கதை தோன்றிய சம்பவங்களும் அழகானது. ஒரு உண்மை சம்பவத்திலிருந்து இந்தக் கதையை எழுதி இருக்கிறேன். என் மகனுடைய பிறந்தநாள் விழாவிற்காக குலதெய்வ ஆலயத்திற்கு சென்ற போது நான் சந்தித்த இரண்டு கதாபாத்திரங்கள் தான் ஆகாச வீரன் - பேரரசி.
நேரில் பார்த்ததைப் படமாக எடுக்க முடியாது. ஆனால், ‘இப்படி இருந்தால் எப்படி இருக்க...

