கடாரம் கொண்டான் – ஜிப்ரானின் 25வது படம்
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் வழங்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் சீயான் விக்ரம் ஸ்டைலிஷான நாயகனாக நடிக்கிறார். இது இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
"இது என்னோட 25 ஆவது படம். என் 24 படங்களுக்கும் கமல் சாரோட பங்களிப்பு இருந்திருக்கு. விக்ரம் சார் நடிக்கும் போது, எங்கு எந்த வாத்தியத்தை இசைக்க வேண்டும் என்பது தெரிந்துவிடும். அந்த அளவுக்கு பெர்ஃபெக்ட்டான ஆக்டர் அவர். அவர் படத்திற்கு ரீ ரெக்கார்டிங் பண்றது ரொம்ப இன்ட்ரெஸ்டிங்காக இருந்தது. ராஜேஷ் உள்பட அனைவருக்கும் நன்றி" என்றார்.
“நாங்கெல்லாம் உள்ளே வந்து திறமைகளை வளர்த்துக் கொண்டோம். ஜிப்ரான் திறமையானவராகத்தான் உள்ளேயே வந்தார். அதனால் தான் அவரை நாங்கள் எங்கள் நிறுவனத்தில் வளைத்துப் போட்டுக்கொண்டோம்” என்றார் கமல்....