காட் ஃபாதர் விமர்சனம்
எளிமையில் எண்ணற்ற வலிமையுண்டு என்பதை நிரூபித்து இருக்கிறது காட்ஃபாதர். ஒரு சாதாரண அப்பாவிற்கும், மற்றொரு தாதா அப்பாவிற்கும் முட்டல் வந்தால் முடிவு என்னாகும் என்பதைத் தான் காட்ஃபாதர் பேசி இருக்கிறது. திரைக்கதை அமைப்பில் வலுவாக இருக்கிறார் காட்ஃபாதர்.
அமைதியை விரும்பும் நட்டிக்கு மகன் என்றால் உயிர். அந்த மகனின் உயிரைத் தன் மகனுக்காக வாங்க நினைக்கிறார் வில்லன் லால். நட்டி தன் மகனைக் காப்பாற்ற அப்பார்ட்மென்ட் உள்ளிருந்தே எடுக்கும் முயற்சிகள், அதற்கு லால் எதிர்வினையாற்றும் செயல்கள் என படம் நெடுக பரபரப்பிற்குக் குறைவேயில்லை.
நடிகர் நட்டிக்கு இந்தப் படம் நல்லதொரு அடையாளம். எல்லாக் காட்சிகளையும் சரியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். அவரின் மனைவியாக வரும் அனன்யாவும் குறை காண முடியாதளவில் தன் பங்களிப்பைக் கொடுத்துள்ளார். வில்லன் லானின் நடிப்பில் வீரியம் அதிகம். குட்டிப்பையன் அஸ்வந்த் அட...