Shadow

Tag: Greenative Films

விதார்த் நடிக்கும் புலனாய்வு சைக்கோ த்ரில்லர் திரைப்படம்

விதார்த் நடிக்கும் புலனாய்வு சைக்கோ த்ரில்லர் திரைப்படம்

சினிமா, திரைத் துளி
'யதார்த்த நாயகன்' நடிகர் விதார்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் தொடக்கவிழா ஜூலை 1 அன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கிரினேடிவ் குழுமத்தைச் சேர்ந்த கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார். இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுத, ஒளிப்பதிவை எஸ். ஆர். சதீஷ்குமார் மேற்கொள்கிறார். பின்னணியிசைக்கும் முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்திற்காக ‘வலிமை’ படப் புகழ் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, கலை இயக்கத்தை மோகன் கவனிக்கிறார். 'டான்' படப்புகழ் நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு பணிகளைக் கையாள, பிரமிப்பை உண்டாக்கும் சண்டைக் காட்சிகளை த...