Shadow

Tag: Gyaara Gyaara

கியாரா கியாரா – காலத்தை வளைக்கும் மர்ம த்ரில்லர் | ZEE 5

கியாரா கியாரா – காலத்தை வளைக்கும் மர்ம த்ரில்லர் | ZEE 5

OTT, Web Series
மும்பையின் புகழ்பெற்ற டேவிட் சாசூன் நூலகத்தின் கடிகார கோபுரம் வெள்ளிக்கிழமை மாலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஜீ5 -இல் சமீபத்தில் வெளியான, மர்ம திரில்லர் ‘கியாரா கியாரா’ சீரிஸின், வசீகரிக்கும் 3டி ப்ரொஜெக்ஷனை நடத்தியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த த்ரில்லரின் ஒரு ஸ்னீக் பீக் மூலம், மும்பைவாசி பொது மக்கள் ஒரு அற்புதமான ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். குனீத் மோங்காவின் சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் கரண் ஜோஹரின் தர்மடிக் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கூட்டணி தயாரிப்பில், உமேஷ் பிஷ்ட் இயக்கியுள்ள 'கியாரா கியாரா' சீரிஸில், ராகவ் ஜூயல், கிருத்திகா கம்ரா மற்றும் தைரியா கர்வா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்டோரியன் கோதிக் (Gothic) கட்டடக்கலைக்குப் பெயர் பெற்ற டேவிட் சாசூன் நூலகம், மும்பையின் பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நிகழ்ச்சியின் தொடக்க நாளான ஆகஸ்ட் 9 அன்ற...