ரவிபச்சமுத்து பிறந்தநாள் விழா & IJK மாநில பொதுக்கூட்டம்
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மாநில அளவிலான பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சனிக்கிழமை (15.07.2023) நடைபெற்றது. YMCA மைதானத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டம் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் தலைமையில் கூட்டணி கட்சி முன்னோடிகள் மற்றும் 20000 பேர் IJK கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவரும், பெரம்பலூர் எம்.பி.யுமான பாரிவேந்தர் தலைமை வகித்தார். மேலும், இந்நிகழ்வில் அதிமுக சட்டப் பேரவை எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, இந்திய ஜனநாயக கட்சியின் பொருளாளர் ஜி.ராஜன், மாநில பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன், துணைத் தலைவர் ஆனந்த முருகன், துணை பொதுச் செயலாளர் நெல்லை ஜி.ஜீவா, மாநில இணை பொதுச் செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின், அதிமுக அரியலூர் மா...