Shadow

Tag: Iruttu Araiyil Murattu Kuththu

“படத்தில் மெஸ்சேஜ் சொல்லியுள்ளேன்” – ஹரஹர மஹாதேவகி இயக்குநர்

“படத்தில் மெஸ்சேஜ் சொல்லியுள்ளேன்” – ஹரஹர மஹாதேவகி இயக்குநர்

சினிமா, திரைச் செய்தி
ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. அடல்ட் ஹாரர் காமெடி வகை சேர்ந்த படம் என்பதாலும், ஹர ஹர மஹாதேவகி இயக்குநர் சன்தோஷ் P. ஜெயக்குமார் இயக்கியுள்ளதாலும், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் உள்ளது. படத்தின் இயக்குநர் சன்தோஷ் P. ஜெயக்குமார் பேசுகையில், "நான் இயக்கும் இரண்டாவது படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. அடல்ட் ஹாரர் காமெடி படம். இவர் ஏன் இது போன்ற படங்களை எடுக்கிறார்? கருத்துச் சொல்லும் படங்களை எடுக்காமல் ஏன் இப்படியான படங்களை எடுத்துத் திரைத்துறையை சீரழிக்கிறீர்கள் என உங்களுக்குள் ஏராளமான கேள்விகள் இருக்கும். ஆனால் இது ஒரு ஜானர். உலக சினிமாவில் எல்லா இடத்திலும் இருக்கிறது. தமிழில் இல்லை. இந்தப் படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாகப் பார்த்தால் பொழுது போக்கு படமாக மட்டுமே தெரியும். அப்படித்தான் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்...