Shadow

Tag: Iyakki shortfilm

இயக்கி – கால்டாக்சி ஓட்டுநர்களின் வலி

இயக்கி – கால்டாக்சி ஓட்டுநர்களின் வலி

சினிமா, திரைத் துளி
நயன்தாரா நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் டோரா. இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர் ஷான். அவர் தற்பொழுது, “இயக்கி“ என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். கால் டாக்சி ஓட்டுபவர்களின் நெகட்டிவான பக்கங்களை மட்டுமே இது வரை நமக்குக் காட்டி அவர்களின் மேல் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், ஷானின் "இயக்கி" குறும்படம் அதைத் தகர்த்து அவர்களும் நம்மில் ஒருவர் தான், அவர்களுக்கும் சோகமான பக்கங்கள் இருக்கிறது என்கிற நிதர்சனமான உண்மையை உரக்கச் சொல்கிறது. 26 நிமிடத்துக்குள் ஒரு ஓட்டுநரின் வலி மிகுந்த வாழ்க்கையை உணர்த்தியுள்ளார் ஷான். "இந்தக் கதையைப் படமாக்குவது என்று முடிவெடுத்தவுடன் கால் டாக்சி ஓட்டுநரானேன்.500 க்கும் மேல் டிரிப் அடித்து அனுபவத்தைக் கற்றுக் கொண்டு அதற்கு மேல் படமாக்கினேன். பட்டம் பெற்றுவிட்டு, உணவு, உறக்கம் எல்லாவற்றையும் இழந்து குடும்பத்திற்காக அடிமை வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருக...