
மர்மர் விமர்சனம் | Murmur review
தமிழின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் (Found Footage) திரைப்படம். இப்படத்தில் பின்னணி இசையும் இல்லை, மற்ற படங்கள் போல் பிரத்தியேகமான கேமரா ஒளிப்பதிவும் இல்லை. போகிற போக்கில், நாம் மொபைலிலோ, கேமராவிலோ படம்பிடிக்கும் ரா ஃபூட்டேஜ்கள் (Raw footage) போல்தான் முழுப்படமுமே உள்ளது.
அமானுஷ்ய விஷயங்கள் சார்ந்த தகவல்களைப் பதிவிடும் ஏழு யூடியூபர்கள், ஜவ்வாது மலையில் இருக்கும் ஏழு கன்னிச்சாமிகள் மற்றும் மங்கை எனும் சூனியக்கார ஆவி சுற்றித் திரிவதை நேரடியாகப் பதிவு செய்யச் செல்கிறார்கள். அவர்கள் காணாமல் போகின்றனர். அவர்களைக் கண்டுபிடிக்க செல்லும் காவல் துறையினர் உடைந்து கிடக்கும் கேமராக்களைப் பறிமுதல் செய்கின்றனர். அந்த யூடியூபர்களின் கேமராவில் பதிவான ஏழு மணி நேர ஃபூட்டேஜ்களைத் தொகுத்து ஆவணப்படமாக வெளியிடப்படுகிறது.
ரிஷி, மெல்வின், அங்கிதா, ஜெனிஃபர் என நான்கு யூட்யூபர்களும், காந்தா எனும் உள்ளூர்ப் பெண்ணும் ...