Shadow

Tag: குப்புசாமி

தினம் ஒரு மூலிகை

தினம் ஒரு மூலிகை

மருத்துவம்
மூலிகை என்பது எங்கோ காட்டில் மட்டுமே கிடைக்கும் அபூர்வ வஸ்து என்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவை எல்லாம் நம் கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கின்றன. நாம்தான் அவற்றை கவனிப்பதில்லை என்கிறார் திரு.குப்புசாமி அவர்கள். "மூலிகை வளம்" குப்புசாமி ஐயா என இணையவெளியில் பிரபலமான திரு.குப்புசாமி அவர்கள் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி. தற்போது முழுநேரமாக அரிய மூலிகைகளை தேடி சேகரித்து தன் தோட்டத்தில் வளர்த்து வருகிறார். மூலிகைகள் தொடர்பான தன்னுடைய ஆய்வுகளையும் அனுபவங்களையும் அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.அதன் தொடர்ச்சியாக நம்முடைய 'இது தமிழ்' வாசகர்களுக்காக மூலிகைகளைப் பற்றிய அறிமுகத்தை "தினம் ஒரு மூலிகை" என்னும் தலைப்பில் தொடராக அளிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் அரிய தகவல்களுடன் "தினம் ஒரு மூலிகை"....