
லைஃப் விமர்சனம்
பூமிக்கு வெளியில் வாழும் உயிரினம் ஒன்றைச் செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள். ஓர் அணு உயிரியான அதைக் கண்டுபிடித்ததன் மூலம் மகத்தானதொரு பெருமிதத்தில் உள்ளது ஆறு பேர் கொண்ட அக்குழு. அவ்வுயிரி அசைந்து தன் இருப்பைக் காட்டியவுடன் தான் படத்தின் பெயரே போடுகிறார்கள்.
ஒளி புகும்தன்மையோடு மிக அழகாய் இருந்த அந்த ஓர் அணு உயிரி, தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு பல்லணு உயிரியாக வளர்கிறது. அதிபுத்திசாலியாய்ப் பரிணமிக்கும் அந்த உயிரால் என்னென்ன விளைவுகள் நேர்கிறது என்பதுதான் படத்தின் கதை.
கதை இப்படித் தான் செல்லும் என்ற பார்வையாளர்களின் யூகத்தை மெய்ப்பிக்காதபடிக்கு மெனக்கெட்டிருக்கலாம் திரைக்கதை எழுதியுள்ள ரெட் ரீஸும், பால் வெர்னிக்கும். எனினும் படத்தைச் சுவாரசியப்படுத்துவது கலை இயக்குநர் ஸ்டீவன் லாரென்ஸும், இசையமைப்பாளர் எக்ஸ்த்ராந்த்தும், ஒளிப்பதிவாளர் ஷேம...


