மல்லி – ராஜா ராணி ஃபேன்டசி படம்
முத்து சன்னதி பிலிம்ஸ் மானப்ப வஜ்சல் வழங்க, ரேணுகா ஜெகதீஷ் தயாரித்திருக்கும் படம் 'மல்லி'. ரத்தன் மௌலி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மஞ்சு தீக்ஷித் நடித்துள்ளார். மற்றும் டெலிஃபோன் ராஜ், ரவிச்சந்திரன், அருண்ராஜா நாகேஷ், சைமன், அம்சவேலு இவர்களுடன் வில்லனாக JVR நடித்துள்ளார்.
"பெற்றோரின் காதல் எதிர்ப்பிற்குப் பயந்து வீட்டை விட்டு ஓடிவரும் காதல் ஜோடி ஒரு காட்டு பங்களாவில் தங்குகிறார்கள். அவர்களுக்கு ஊரில் இருந்த நண்பர்கள் மூன்று பேர் அங்கு வந்து உதவி செய்து அவர்களை ராஜா – ராணி போல் பார்த்துக் கொள்கிறார்கள்.
மர்மமான முறையில் காதலர்கள் நிஜமாகவே ராஜா ராணி ஆகிறார்கள். அது எப்படி அப்படி ஆனார்கள்? உதவ வந்தவர்கள் யார்? அவர்கள் யாருக்கு எப்படி அரசாட்சி செய்கிறார்கள்? அவர்களுடைய மக்கள் யார்? என்ற கோணத்தில் திரைக்கதை இருக்கும். இறுதியில் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு ஊர் திரும்புகின்றனர...