
காஸ்ரையிடிஸ் – அமில அபாயம்
இன்று இளம் வயதினர் மற்றும் நடு வயதினரையும் பாதிக்கும் பிரதான ஒரு நோயாக வயிற்றில் அமிலம் சுரத்தல் நோய் (Gastritis) காணப்படுகிறது.தொண்டைக் களம் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் கீறல்கள் மற்றும் புண் என்பனவும், முன் சிறுகுடல் என்பன இதற்கு காரணமாக அமைகின்றன. இந்தப் புண் பெப்டிக் அமில புண் (Pepiteutine Diseases) என்று அழைக்கப்படுகிறது.இந்நோய் இரண்டு வகைகளைக் கொண்டது. ஒன்று பாக்டீரியா தாக்கத்தால் ஏற்படுவது. மற்றொன்று புகைப்பிடித்தல, மதுபானம் அருந்துதல், சில வலி நிவாரண மருந்துவகைகளை அதிகளவில் உட்கொள்ளல், மிளகாய் மற்றும் சரக்குப் பொருட்களை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளல், மன அழுத்தம், மன நோய், நீண்ட நாட்களாக இருக்கும் புண், சிறுநீரகத்தின் செயற்பாடு குறைவடைதல் போன்ற காரணங்களால் வயிற்றில் மற்றும் சிறுகுடல் சுவர்களில் புண் ஏற்படலாம்.காஸ்ரையிடிஸ் நோயின் அறிகுறிகள்:~வயிற்றின் மேற...



