
பத்ரி நாராயணனின் மாடி இசைக் கச்சேரி
சுதந்திரமான இசைக்கலைஞரும் ஒலி வடிவமைப்பாளரான பத்ரி நாராயணனின் எண்ணத்தில் உதித்த புதுமையான இசை முயற்சிதான் மொட்டை மாடி இசைக் கச்சேரி.
அது என்ன மொட்டை மாடி இசைக் கச்சேரி?
அதாவது மொட்டை மாடியில் சுமார் இருபது முப்பது இசைக் கலைஞர்களும் பாடகர்களும் ஒன்றிணைந்து பாடுவதுதான் மொட்டை மாடி இசைக் கச்சேரி. விளையாட்டுத்தனமாகச் சாதாரணமாகத் தொடங்கிய இந்த இசை ஆர்வலர்களின் புதிய முயற்சி, இன்று விஸ்வரூபமெடுத்து மாடிட்டோரியம் எப்.டி.எப்.எஸ். என்று வளர்ந்திருக்கிறது.
தரமாக நிர்வகிக்கப்படும் அரங்கம், உலகத் தரம் வாய்ந்த ஒலி ஒளியமைப்புகள், உணவரங்குகள் மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்கள் என்று அனைத்தையும் ஒரே வளாகத்திற்குள் அமைத்து, திரையரங்கில் படம் பார்ப்பதை எல்லா விதத்திலும் மாற்றியமைத்து மறக்க முடியாத அனுபவமாக மாற்றிய சென்னை சத்யம் அரங்கும், இந்த மொட்டை மாடிக் கலைஞர்களுக்கு தளம் அமைத்துத் தந்தால் எப்ப...


