
படைவீரன் விமர்சனம்
ஆண்ட பரம்பரை என்ற பெருமையைத் தலையில் சுமந்தவாறு திரியும் முனீஸ்வரன், படைவீரனாய்க் காவல்துறையில் சேருகிறான்.
'சாதிக்கு ஒன்னுன்னா பெத்த தாயைக் கூடக் கருவறுப்பேன்' என்று நாயகனின் நண்பன் சொல்வான். இவ்வசனத்தை, படத்தின் ஒரு வரிக்கதையாகக் கொள்ளலாம்.
படம் ஒரு முக்கியமான அம்சத்தைத் தொடுகிறது. அது சாதிப்பற்று மனிதத்தன்மையை அழித்து எப்படி வெறியாகப் பரிணமிக்கிறது என்பதே! ஊரிலேயே இருக்கும் இளைஞர்களுக்கும் மத்திம வயது பெண்களுக்கும், அவர்களை வழிநடத்தும் பழமையில் ஊறிய தலைவனுக்கும் அவ்வெறி நிறைந்துள்ளது. தன் சகோதரியை ஊர்ப் பெண்கள் கூடிக் கொலை செய்யும் பொழுது, அந்த அண்ணனுக்கு எந்தப் பதற்றமும் எழுவதில்லை. சாதிப் பெருமையைக் காப்பது தான் தங்கள் தலையாயக் கடமையெனக் கருதிக் கொலை செய்யும் பெண்களுக்கோ எந்தக் குற்றயுணர்ச்சியுமில்லை! 'உங்களுக்கு என்ன செய்யணும்னு தெரியாதா?' என்று தலைவராக வரும் கவிதா பாரதியின் கேள்வி...


