Shadow

Tag: Pulimurugan

பல மொழியில் சீற உள்ள புலிமுருகன்

பல மொழியில் சீற உள்ள புலிமுருகன்

சினிமா, திரைத் துளி
மோகன்லால், கமாலினி முகர்ஜி, ஜெகபதிபாபு, நமீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வைஷாக் இயக்கத்தில் முலக்குப்படம் பிலிம்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படம் புலி முருகன். வெளியிட்ட அனைத்துத் திரையரங்குகளிலும் வசூல் சாதனை படைத்த புலிமுருகன் திரைப்படம் மோகன்லாலின் திரைத்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. இப்படத்தின் மற்ற மொழி உரிமையைப் பெற பலர் போட்டியிட இறுதியில் புலிமுருகன் படத்தின் இந்திய உரிமையை அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ்.பி.பிள்ளை பெற்றுள்ளார். புலிமுருகனின் இந்திய மொழிகள் பதிப்பை ரமேஷ்.பி.பிள்ளையின் அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்துடன் தோமிச்சனின் முலகுப்பாடம் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. பாகுபலி படத்திற்குப் பிறகு பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்க உச்ச நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்துவருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல இந்த...