Shadow

Tag: Rajavukku Check

சேரனின் ராஜாவுக்கு செக்

சேரனின் ராஜாவுக்கு செக்

சினிமா, திரைத் துளி
தமிழ்த் திரையுலகைச் சூழ்ந்திருந்த கருமேகங்கள் முற்றிலும் விலகி விட, நல்ல கதையம்சத்தோடு மிக வேகமாக உருவாகி வந்த "ராஜாவுக்கு செக்" படம் மீண்டும் பணிகளைத் துவக்கியுள்ளது. சேரன், நந்தனா வர்மா, சராயு மோகன், ஸ்ருஷ்டி டாங்கே, இர்ஃபான் ஆகியோர் நடிக்கிறார்கள். மலையாளத் திரைத்துறையில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட், தாமஸ் கொக்காட் இந்தப் படத்தை, 'பல்லாட் கொக்கட் ஃபிலிம் ஹவுஸ்' சார்பில் தயாரிக்கிறார்கள். படத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளதாகச் சொல்கிறார்கள். "மலையாளத் திரையுலகில் கதை ரீதியாகவும், தரம் ரீதியாகவும் நல்ல தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றிருக்கிறோம். உலகம் முழுக்க தமிழ் சினிமாவின் பரவலும், வர்த்தகத்துக்கு நிறைய வாய்ப்புகளும், மிகுதியான திறமையாளர்களும் இருப்பதால் தமிழ் சினிமாவில் படம் எடுக்க காலடி எடுத்து வைத்திருக்கிறோம். ஒரு நடி...