Shadow

Tag: Romeo Pictures

ரோமியோ பிக்சர்ஸும், ஏவியேட் பிக்சர்ஸும் இணையும் புதுப்படம்

ரோமியோ பிக்சர்ஸும், ஏவியேட் பிக்சர்ஸும் இணையும் புதுப்படம்

சினிமா, திரைத் துளி
பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது புதிய படத்தினை ஏவியேட் பிக்சர்ஸ் கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. ரைட்டர் பட இயக்குநரும், DC படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார். இளைய திலகம் பிரபு மற்றும் விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில், த்ரில்லர் கலந்த காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. படப்பிடிப்பின் முதல் நாளான இன்று, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் படப்பிடிப்பு...
மூன்வாக் – தீபாவளி ஸ்பெஷல் | பிரபுதேவா

மூன்வாக் – தீபாவளி ஸ்பெஷல் | பிரபுதேவா

சினிமா, திரைத் துளி
பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘மூன்வாக்’ திரைப்படம் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடனப் புயல் பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் புகழ்பெற்ற கூட்டணியில் உருவாகி உள்ள இத்திரைப்படம், பார்வையாளர்களுக்குச் சிரிப்பும், மறக்க முடியாத குடும்பத் தருணங்களும் நிறைந்த ஒரு பிரம்மாண்டமான திருவிழா அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளைக் கொண்டாட்டமாக மாற்றும் ‘மூன்வாக்’ திரைப்படம், வயது வித்தியாசமின்றி அனைத்துப் பிரிவு பார்வையாளர்களுக்கும் நிச்சயம் மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும் ஏ.ஆர். ரஹ்மானின் கலக்கலான இசை அமைப்பில் உருவாகியுள்ள 'மூன்வாக்' திரைப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா, சுஷ்மிதா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திர...
காதல் ரீசெட் ரிப்பீட் – ஒரு musical story

காதல் ரீசெட் ரிப்பீட் – ஒரு musical story

சினிமா, திரைச் செய்தி
மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ், டி ஸ்டுடியோஸ், டென்வி புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி, மார்ச் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'காதல் ரீசெட் ரிப்பீட்' படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. திரையிசையுலகில் 25 ஆவது ஆண்டாக வெள்ளிவிழா காணும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படக்குழுவினருடன் இயக்குநர் பாலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இவ்விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ''1999 ஆம் ஆண்டில் இளம் இயக்குநராக இருந்த கௌதம் மேனனைச் சந்தித்தேன். கேமரா மேன் ஆர்.டி. ராஜசேகர் மூலமாக விளம்பரப் படத்திற்காக அவர் என்னைச் சந்தித்தார். அதன் பிறகு 2000 ஆண்டில் 'மின்னலே' படத்தின் ப...
வெள்ளிவிழா நாயகன் ஹாரிஸ் ஜெயராஜின் உழைப்பு | Kadhal Reset Repeat

வெள்ளிவிழா நாயகன் ஹாரிஸ் ஜெயராஜின் உழைப்பு | Kadhal Reset Repeat

சினிமா, திரைச் செய்தி
மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ், டி ஸ்டுடியோஸ், டென்வி புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி, மார்ச் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'காதல் ரீசெட் ரிப்பீட்' படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. திரையிசையுலகில் 25 ஆவது ஆண்டாக வெள்ளிவிழா காணும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படக்குழுவினருடன் இயக்குநர் பாலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் பேசிய நடிகர் அர்ஜுன் அசோகன், ''நான் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது. இந்தப் படத்தில் நல்லதொரு கேரக்டரைக் கொடுத்ததற்காக இயக்குநர் விஜய்க்கு நன்றி. படப்பிடிப்புத் தளத்தில் என்னுடைய தமிழ் உச்சரிப்புக்கு சக நடிகர் மதும்கேஷ் உதவி செய...
ஹபீபி – நன்றி, உண்மை, அன்பு | ரோமியோ பிக்சர்ஸ்

ஹபீபி – நன்றி, உண்மை, அன்பு | ரோமியோ பிக்சர்ஸ்

சினிமா, திரைத் துளி
இயக்குநர் மீரா கதிரவன் இயக்கிய ‘ஹபீபி’ திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடவுள்ளதாக தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் ராகுல் அறிவித்துள்ளார்.இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியுள்ள ‘ஹபீபி’ திரைப்படம் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை உண்மைக்கு நெருக்கமாகப் பதிவு செய்கிறது. உண்மையான அன்பு, உறவுகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்ட இந்தப் படத்தின் தலைப்பின் அர்த்தம் ‘என் அன்பே’ என்பதாகும்.‘அவள் பெயர் தமிழரசி’ மற்றும் ‘விழித்திரு’ போன்ற படங்களில் சமூக அக்கறையுள்ள கருத்துகள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மீரா கதிரவன் ‘ஹபீபி’ படத்தில் மீண்டும் அழுத்தமான கதைக்களத்தோடு வருகிறார். புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உணர்வுப்பூர்வமான இந்த கதைக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.படம் குறித்து இயக்குநர் மீரா ...
KISS – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் | ரோமியோ பிக்சர்ஸ்

KISS – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் | ரோமியோ பிக்சர்ஸ்

Movie Posters, கேலரி
ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக, கவின் நடிப்பில் உருவாகியுள்ள “கிஸ்” படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. காதலர் தினம் நெருங்கும் நிலையில், காதல் ஜோடிகள் சுற்றிலும் கூடி முத்தமிட, நடுவில் ஸ்டைலிஷாக நிற்கும் கவினின் கண்கள் மட்டும் மறைக்கப்பட்டிருக்கும். இப்படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல், பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளார். டான்ஸராக திரைத்துறைக்குள் நுழைந்து, நடன இயக்குநராக வளர்ந்து, நடிகராகவும் வலம் வரும் சதீஷ், இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய இளைய தலைமுறை காதலைக் கொண்டாடும் விதத்தில் வித்தியாசமான ரொமான்ஸ் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழ் சினிமா...