Shadow

Tag: Saavee thirai vimarsanam

சாவீ விமர்சனம் | Saavee review

சாவீ விமர்சனம் | Saavee review

சினிமா, திரை விமர்சனம்
'சாவு வீடு' என்பதன் சுருக்கமாகச் சாவீ எனத் தலைப்பிட்டுள்ளனர். 'சாவு வீட்டுக்கு டிக்கெட் கொடுங்க', 'சாவு வீட்டுக்குப் போயிட்டு வர்றேன்' எனப் பார்வையாளர்களால் கேட்கவோ, சொல்லவோ முடியாதெனச் சில திரையரங்கத்தில் எதிர்ப்பு வந்ததன் காரணமாகச் 'சாவீ' எனத் தலைப்பை மாற்றி வெளியிடுகின்றனர். நாயகன் ஜூடின் இளைய தாய்மாமன் ஆரோக்யராஜ் இறந்து விடுகிறார். அவரது பிணம் காணாமல் போகிறது. ஆரோக்யராஜின் உடல் என்னானது என்பதற்குப் பதிலுடன் படம் நிறைவுறுகிறது. ஆய்வாளர் சக்கரவர்த்தியாக ஆதேஷ் பாலா நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரம் என்றாலும், தேவையற்ற இடங்களில் சம்பந்தமே இல்லாமல் திடீர் தீடீரெனக் குரலை உயர்த்துகிறார். நாயகனின் நண்பன் கிரணாக ராட்சசன் யாசர், படத்தின் கலகலப்பிற்கு ஓரளவு உதவியுள்ளார். பானா காத்தாடி, கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த உதய் தீப், முதல் முறையாக நாயகனாக நடித்துள்ளார். இவர், சிறந்த குழந்...