
டாக்டர் பட்டம் பெற்ற நார்வே தமிழ்ப் பாடகர்
நார்வே நாட்டில் வசிக்கும் டி.எஸ்.ஜெயராஜன், தலைவாசல் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சாய்பாபா பற்றிய திரைப்படமான ‘அபூர்வ மகான்’ படத்தில் இரண்டு பாடல்களைப் பாடி, பின்னணிப் பாடகராக அறிமுகமானார். தஷி இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்களும் படமும் பரவலான கவனத்தை ஈர்த்தது. டி.எஸ்.ஜெயராஜின் குரலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து, தஷி இசையமைப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘ஹார்ட் பீட், ‘மாய வீடு’ ஆகிய படங்களிலும் பாடியுள்ள டி.எஸ்.ஜெயராஜனுக்கு, மேலும் பல படங்களில் பாட வாய்ப்புகள் வந்துள்ளது.
திரைப்படங்களில் பாடுவதோடு, பல இசை ஆல்பங்களில் பாடியுள்ள டி.எஸ்.ஜெயராஜன், ஐயப்பன், சாய் பாபா, வள்ளலார் ஆகியோர் பற்றிய 50 க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களைப் பாடித் தயாரித்துள்ளார். பக்திப் பாடல்கள் பாடுவதைத் தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக வைத்திருக்கும் இவர், பக்தி பாடல்களை எழுதிப் பாடுவதோடு, தனத...


