“எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கு” – ஹரிஷ் கல்யாண் | பார்க்கிங்
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.
சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஸ்ரீனீஸ், “நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் செலவுகளைக் கவனித்து வந்த என் பள்ளி நண்பர்களுக்கு நன்றி. என் ஸ்கூல்மேட் தான் இயக்குநர் நெல்சன். அவரை டார்ச்சர் செய்துதான் அவரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அவருக்கு நன்றி. நான் தனியாக படம் எடுக்க வேண்டும் என நினைத்தபோது உதவிய அருண் பாலாஜி, நந்தகுமார் இரண்டு பேருக்கும் நன்றி. நான் செய்த ‘பலூன்’ திரைப்படம் எனக்கு திருப்தியாக இல்லை. அந்த சமயத்தில் விஜய்சேதுபதி, திலீப் சுப்பராயன் என்னைத் தயார...