யூஎஸ்ஏ நெட்வொர்க்ஸில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்
பாடகியும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் ஓர் புதிய சிகரத்தை எட்டியுள்ளார். யூஎஸ்ஏ என்னும் பிரபல நெட்வொர்க்கால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவர் ட்ரெட்ஸ்டோன் என்னும் தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இத்தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான CIA-வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் பிளாக் ஆப்ஸ் புரோக்ராம் ஆன ட்ரெட்ஸ்டோனை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. ட்ரெட்ஸ்டோனில் பணி புரியும் அதிகாரிகளுக்கு அசாத்திய ஆற்றல் பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் அசாத்திய கொலையாளிகளாக, திறமை பெற்றவர்களாக மாற்றப்படுவர்.
இந்தத் தொலைக்காட்சி தொடரில் ஸ்ருதி, நீரா பட்டேல் என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இக்கதாபாத்திரம் டெல்லியில் ஒரு ஹோட்டல் பணியாளராக வேலை பார்த்துக் கொண்டே மறைமுகமாகக் கொலை...