தி வில்லேஜ் – ப்ரைம் வீடியோவின் திகில் தொடர்
அமேசான் ப்ரைம் வீடியோவில், தமிழ் ஒரிஜினல் திகில் தொடரான “தி வில்லேஜ்” நவம்பர் 24 அன்று வெளியாகிறது. ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிக்க, மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.
இந்தத் தொடரில் புகழ்பெற்ற தமிழ் நடிகரான ஆர்யா, மிகச் சிறந்த திறமை வாய்ந்த நட்சத்திரங்களான திவ்யா பிள்ளை, அலீயா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பூஜா ராமச்சந்திரன், முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கோக்கன், வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், மற்றும் தலைவாசல் விஜய் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ் குப்தா ஆகியோரால் உருவாக்கப்பட்டு, முதலில் யாலி ட்ரீம் ஒர்க்ஸால் அதே பெயரில் பிரசுரிக்கப்பட்ட கிராஃபிக் திகில் நாவலால் ஈர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு திகில் தொடராகும். தனது குடும்பத்தை ஆபத்திலிருந்து மீட்டு காப்பாற்...