
“நீ நடி கண்ணா!” – With Love ரஜினிகாந்த் | அபிஷன் ஜீவிந்த்
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் (With Love)” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான், “அபிஷன் ஒரு தூய மனம் கொண்டவர். அவர் மாறாமல் அப்படியே இருக்க வேண்டும். சௌந்தர்யா அக்காவின் பெயருக்கு பக்கத்தில் என் பெயர் வருவதையே நான் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் நினைக்கிறேன். வித் லவ் படத்திற்கு முன் நீங்கள் பார்த்த சௌந்தர்யா அக்கா, இந்தப் படத்திற்கு பிறகு நீங்கள் பார்க்கும் சௌந்தர்யா அக்காவிலிருந்து வேறுபட்டவராக இருப்பார்.
அபிஷந்திற்குள் இருந்த ஒரு insecurity-யை மாற...




