
யெல்லோ விமர்சனம் | Yellow review
தமிழ் சினிமாவில் வன்முறை படங்களே மேலோங்கி இருக்கும் சூழலில் அத்தி பூத்தாற்போல ஆங்காங்கே வெளியாகும் மென்மையான ஃபீல் குட் படங்கள் ரசிகர்கள் மனதை வருடிச் செல்வதோடு மிகப்பெரிய வெற்றியையும் பெறுகின்றன. மிகச் சமீபத்திய உதாரணங்களாக லப்பர் பந்து, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களைச் சொல்லலாம். அந்த வகையில் ஒரு பெண்ணின் உணர்வுகளை மையப்படுத்தி இந்தியில் வெளியான குயின் படத்தை போல தமிழில் வெளியாகியிருக்கும் படம் தான் “யெல்லோ”வாகும். பிக் பாஸ் பிரபலம் “அராத்தி” பூர்ணிமா ரவி கதையின் நாயகியாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த்துள்ளார்.
ரோடு ட்ராமா வகைமையைச் சேர்ந்த இந்தப் படத்தில் காதல் தோல்வி, சொந்த வாழ்க்கையில் அப்பாவின் திடீர் உடல்நலக் குறைவு, தன் கேரியர், வாழ்க்கைக் கனவு சிதைந்து அல்லாடுகிறார் பூர்ணிமா ரவி. பிடிக்காத ஒரு வங்கி வேலையில் மெஷின் போல வேலை செய்து வரும் நாயகி, ஒரு கட்டத்தில் சில நாட்கள் கிடைத்த வி...


