Shadow

அனன்யா, ஓவியா இணையும் ‘புலி வால்’

Puli Vaal HD images
இன்றைய இளைய சமுதாயத்தினரின் தவிர்க்க முடியாத அல்லல்களை நகைச்சுவையுடன் சொல்லவரும் ஒரு திரைப்படம். நம் சமுதாயத்தின் இரண்டு கோடிகளில் உள்ள இருவரின் வாழ்க்கையில் ஏற்படும் சுவாரசியமான நிகழ்வுகளும் அதன் விளைவுகளும்தான் புலி வால் எனும் இத்திரைப்படம்.

எந்த விலை கொடுத்தும் வெற்றியை மட்டுமே தக்க வைக்க நினைக்கும் உயர் அந்தஸ்த்தில் இருக்கும் ஓர் ஐ.டி. நிறுவனர் கார்த்திக். கார்த்திக்கின் காதலியான மோனிகா தான் அவனின் பி.ஏ.வும் கூட. கார்த்திக்காக பிரசன்னா; மோனிகாவாக ஓவியா. சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் காசி. காசியுடன் வேலை பார்க்கும் செல்வியும் காசியும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். காசியாக விமல்; செல்வியாக அனன்யா. கார்த்திக்கின் பெற்றோரால் அவனுக்கு நிச்சயிக்கப்படும் பெண் பவித்ரா. பவித்ராவாக இனியா.

நீரோடையாக சென்றுகொண்டிருந்த அவரவர் வாழ்க்கையில், பவித்ரா கார்த்திக்குக்காக நிச்சயிக்கப்பட்ட பெண் என்று மோனிகாவுக்குத் தெரிய வந்ததும் பல சுவாரசியமான திருப்பங்கள் நிகழ்கின்றன. அந்த சந்தர்ப்பத்தில் கார்த்திக்கின் விலை உயர்ந்த ஒரு பொருள் காசியின் கைகளில் கிடைக்கிறது. அதன் அழகில் மயங்கும் காசி, அதைத் தன் சொத்தாகவே பாவிக்கத் துவங்குகிறான். 

Puli Vaal HD images

பல இரகசியங்களை அதில் மறைத்து வைத்திருந்த கார்த்திக் அதைத் தேடி அலைகிறான். பல சந்தர்ப்பங்களில் கார்த்திக்குடன் பேசும் காசி, கார்த்திக்கின் சில நடவடிக்கைகளில் பதட்டமடைந்து அதைக் கொடுக்க மறுப்பதுடன், தனக்கு வேண்டாதவர்களை கார்த்திக்கைக் கொண்டு தண்டிக்கிறான்.

இதனால் பெரும் மன உலைச்சலுக்கு உள்ளாகும் கார்த்திக், வெறித்தனமாக காசியை அடையாளம் காண முயற்சிக்கிறான். அதில் வெற்றியும் பெறுகிறான். அதன் பிறகு கார்த்திக்கும் காசியும் என்ன ஆனார்கள்? மோனிகா, பவித்ரா இருவரில் யாரை கார்த்திக் திருமணம் செய்தான்? பல திருப்பங்களுக்குப் பிறகு இந்த கேள்விகளுக்கான சரியான பதிலுடன் படம் நிறைவுறுகிறது.

நொடிக்கு ஒரு குறுஞ்செய்தி கூறும் சொக்கு (சூரி), சூப்பர்வைசர் வள்ளியப்பன் (தம்பி இராமையா) மற்றும் அவரின் மெளனக்காதலி சுந்தரி (ஜெயவாணி) என்று கலகலப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம் ‘புலி வால்’. 

நடிகர்கள்:

>> விமல்
>> பிரசன்னா
>> அனன்யா
>> ஓவியா
>> இனியா
>> தம்பி இராமையா
>> சூரி
>> ஸ்வர்ணமால்யா
>> ப்ரேம்குமார்

பணிக்குழு:

>> இயக்கம் – ஜி.மாரிமுத்து
>> தயாரிப்பு – மேஜிக் ஃப்ரேம்ஸ்
>> தயாரிப்பாளர்கள் – சரத்குமார், ராதிகா சரத்குமார் & லிஸ்டின் ஸ்டீஃபன்
>> ஒளிப்பதிவு – போஜன் கே.தினேஷ்
>> இசை – ரகுநந்தன்
>> படத்தொகுப்பு – கிஷோர்
>> கலை – ஆனந்தன்
>> பாடல் – வைரமுத்து, கார்க்கி
>> நடனம் – சுசித்ரா, ஸ்ரீதர்
>> சண்டை – ராஜசேகர்
>> உடை – செல்வம்
>> ஒப்பனை – முத்து கிருஷ்ணன்
>> ஸ்டில்ஸ் – சரவணன்
>> சீஃப் ஆப்ரேட்டிங் ஆஃபிசர் – ஷக்திவேல்
>> ப்ரொடெக்ஷன் கன்ட்ரோலர் – பிரபாகர்
>> ப்ரொடெக்ஷன் மேனஜர் – ஜி.மாரியப்பன்
>> பி.ஆர்.ஓ.நிகில்முருகன்
>> டிசைனர்ஷபீர்

– கோலிவுட் பாலா

Leave a Reply