Shadow

புதிய உற்சாகத்தோடு இளையராஜா!

RRSP

இசைஞானி இளையராஜா கடந்த சில வாரங்களுக்குமுன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய இளையராஜா மருத்துவர்களின் அலோசனையின்படி கட்டாய ஓய்வில் இருந்தார்.

இதனால் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இருந்தும் ரசிகர்களை ஏமாற்றாமல், வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் தோன்றி ரசிகர்களை நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தினார்.

தற்போது பூரண நலம்பெற்று மீண்டும் தன் இசைப்பயணத்தைத் தொடங்கிய இளையராஜா, புதிய உற்சாகத்தோடு கவிஞர் சினேகன் நடிக்கும் இராஜராஜ சோழனின் போர்வாள் திரைப்படத்திற்காக ஒரு பாடலை ஞாயிற்றுக்கிழமை (05.01.2014) அன்று, பிரசாத் தியேட்டரில் கம்போஸ் செய்துள்ளார். திங்கட்கிழமை (06.01.2014) அன்று, அந்தப் பாடலுக்கான குரல்பதிவு செய்யும் பணியையும் தொடர்கிறார்.

இசைஞானி உடல்நலம் பெற்று திரும்பியபின் பதிவு செய்யும் முதல் பாடல் என்பதாலும், 2014 இல் இசைஞானியால் பதிவு செய்யப்படும் முதல் பாடல் என்பதாலும், இராஜராஜ சோழனின் போர்வாள் திரைப்பட இயக்குநரும் படக்குழுவினரும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.

– கோலிவுட் பாலா

Leave a Reply