Shadow

எல்லாம் முருகன் செயல் – சுந்தர் சி.பாபு

Sundar C.Babu

இயக்குநர் விஜயபாஸ்கர் சொன்ன கதை தயாரிப்பாளர் கார்த்திகேயனுக்குப் பிடித்து விடுகிறது. இரண்டு வருடங்களாக படமெதுவும் ஒத்துக் கொள்ளாத சுந்தர் சி. பாபுவிடம் கேட்காமலேயே, படத்தின் இசையமைப்பாளர் அவர் தானென இயக்குநர் பெயர் போட்டுக் கொள்கிறார்.

மருத்துவமனையிலிருந்த தன் அம்மாவிடம், “நீங்க வீட்டுக்கு வந்ததும் நான் மீண்டும் இசையமைக்கிறேன்” எனச் சொல்லியுள்ளார் சுந்தர் சி.பாபு. ஆனால் அவரின் அம்மா தவறியதால், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற படங்கள் எதுவும் ஒத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார்.

அச்சமயத்தில் தான், ‘அட்டி’ படத்துக்கு இசையமைக்குமாறு அணுகியுள்ளனர். தனது அம்மா தனக்கு மகளாகப் பிறந்துள்ளாரென சுந்தர் சி.பாபு மகிழ்ச்சியில் திளைத்திருந்த நேரமது. தயாரிப்பாளர் பெயரோ கார்த்திகேயன். ஆக, இது முருகனின் விருப்பமென படத்தை இசையமைக்க ஒத்துக் கொண்டுள்ளார் சுந்தர் சி.பாபு.

அதற்கும் மேல், ‘அட்டி’ படத்தை அவரே வாங்கி தனது மகள் பெயரைக் கொண்ட நிறுவனமான ‘பரிநிதா புரொடக்ஷன்ஸ்’ மூலம் வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது, படத்தின் நிச்சய வெற்றிக்கான அறிகுறியென படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.