Shadow

சபீரின் “கரர் – தி டீல்”

Karar - The Deal

நிகிதா தன் தாத்தாவுடன் தென் ஆஃப்ரிக்காவில் வாழ்கிறார். நகரின் ஒதுக்குப்புறமான மாளிகையொன்றில் இருவரும் வசிக்கிறார்கள். அன்னே எனும் நர்ஸ், நிகிதாவின் தாத்தாவைப் பார்த்துக் கொள்ள அம்மாளிகையிலேயே தங்குகிறார். ஒருநாள், நிகிதாவின் தாத்தாவிற்கு உடல்நிலை மோசமாகிறது. அம்மாளிகைக்கு வழக்கமாக வரும் மருத்துவரை அன்று தொடர்பு கொள்ள முடியாததால், நிகிதா ஆர்யன் எனும் மருத்துவரை அவசர உதவிக்கு அழைக்கிறாள். நிகிதாவின் தாத்தாவைக் காப்பாற்றுவதோடு, நிகிதாவிற்கும் மருத்துவம் பார்க்கிறார் ஆர்யன். ஆர்யனை நிகிதாவின் தாத்தாவிற்குப் பிடித்து விடுகிறது. தன் பேத்தி நிகிதாவை ஆர்யனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார்.

நிகிதாவின் உடலநலக் குறைப்பாடல் தாம்பத்யம் மேற்கொள்வதில் ஆர்யனுக்கு சிக்கல் ஏற்படுவதால், நர்ஸ் அன்னேவுடன் தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. உண்மையை அறிந்தாலும், தன் தாத்தாவின் உடல்நிலை மேலும் பாதிப்படைந்து விடக்கூடாதென கணவனின் நடவடிக்கையைப் பொறுத்துக் கொள்கிறாள். ஆனால் ஆர்யனோ தாத்தாவிடம் சொல்லி, சொத்துகளை தன் பெயரில் மாற்றும்படி நிகிதாவைத் தொந்தரவு செய்கிறான்.

ஒரு கட்டத்தில், அன்னே கொலை செய்யப்படுகிறாள். அவளது உடலை கணவனும் மனைவியும் இணைந்து அப்புறப்படுத்துகின்றனர். ஆனால் அன்னேவின் ஆவி நிகிதாவை அதன்பின் தொந்தரவு செய்யத் தொடங்குகிறது. அன்னே சாகவில்லை என்ற உண்மை நிகிதாவிற்குத் தெரிந்து விடுகிறது. பின் என்னானது என்பதுதான் படத்தின் கதை.

நிகிதாவாக மஹேக் சஹாலும், அன்னேவாக ஜோதி ராணாவும், ஆர்யனாக தருன் ஆரோராவும் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் சபீர் இயக்குகிறார். இம்மாத இறுதியில், இந்த ஹிந்தி திரைப்படம் சென்னையில் வெளியாகவுள்ளது.